சிறுகதை: புக்கிட் கூடா கம்பம் 25.5.2020 வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன். இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும் விடுமுறை. இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்
அன்பானந்தனார் விருது பெற்ற எழுத்தாளருக்கு வாழ்த்துகள். 1978இல் மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் எழுதியவர்தானே அந்தப் பெருமகனார்.
பதிலளிநீக்குஅவர் கலந்து கொண்டு எழுதிய அந்த “மறைமலையடிகளார் பிள்ளைத் தமிழ்” எழுதும் போட்டியில் நானும கலந்துகொண்டு (எனது 19வயதில்) எழுதினேன். மொத்தம் கலந்துகொண்ட 12 பேரில் அன்பானந்தனார் முதலிடமும், அண்மையில் மறைந்த புலவர் இறைக்குருவனார் இரண்டாமிடமும், தமிழண்ணலார் மூன்றாமிடமும் நான் நான்காமிடமு் பெற்றோம். இந்தத் தகவலையே அன்பானந்தனாரின் “மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்” நூலில்தான் பார்த்தேன்.
எனது வலைப்பக்கத்தில் எனது மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன். இயலுமேல் பாருங்கள்.
http://valarumkavithai.blogspot.in/
மீண்டும் வாழ்த்துகளும், நன்றிகலந்த வணக்கமும்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை - 622 004
நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்கு