மாமன் மச்சான் விளையாட்டு வே.ம.அருச்சுணன் மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’ இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில் பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...
வணக்கம்,எனது 50 ஆண்டு கால இலக்கியப் பணியைச் சிறப்பாக ஆற்றி வருகிறேன். இங்கு எனது சில சிறந்த இலக்கியப் படைப்புகளை உங்கள் முன் சமர்பிக்கிறேன். என்றும் அன்புடன், வே.ம அருச்சுணன்
அன்பானந்தனார் விருது பெற்ற எழுத்தாளருக்கு வாழ்த்துகள். 1978இல் மறைமலையடிகள் பிள்ளைத் தமிழ் எழுதியவர்தானே அந்தப் பெருமகனார்.
பதிலளிநீக்குஅவர் கலந்து கொண்டு எழுதிய அந்த “மறைமலையடிகளார் பிள்ளைத் தமிழ்” எழுதும் போட்டியில் நானும கலந்துகொண்டு (எனது 19வயதில்) எழுதினேன். மொத்தம் கலந்துகொண்ட 12 பேரில் அன்பானந்தனார் முதலிடமும், அண்மையில் மறைந்த புலவர் இறைக்குருவனார் இரண்டாமிடமும், தமிழண்ணலார் மூன்றாமிடமும் நான் நான்காமிடமு் பெற்றோம். இந்தத் தகவலையே அன்பானந்தனாரின் “மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்” நூலில்தான் பார்த்தேன்.
எனது வலைப்பக்கத்தில் எனது மறைமலையடிகள் பிள்ளைத்தமிழ்ப் பாடல்களை ஒவ்வொன்றாக இட்டுவருகிறேன். இயலுமேல் பாருங்கள்.
http://valarumkavithai.blogspot.in/
மீண்டும் வாழ்த்துகளும், நன்றிகலந்த வணக்கமும்.
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
புதுக்கோட்டை - 622 004
நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்கு