முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீப்பொறி கவிஞரே நீங்களுமா



கவிதை:    தீப்பொறி கவிஞரே நீங்களுமா   
                    வே.ம.அருச்சுணன் 

நாளும் கவிமழை பொழிந்த
தீப்பொறியே நீங்களுமா தீடீரென
எங்களை விட்டு
மறைந்து விட்டீர்.........!

என்ன கொடுமை
மண்ணின் மணம் பரப்பிய
இலக்கிய ஜாம்பவான்களின்
மரணித்தல் தொடர்கதை தானோ.........!

சிறுகதை மன்னன் மு.அன்புச்செல்வன்
நாவலாசிரியர் ப.சந்திரகாந்தம்
தேன்சுவைக் கவிஞர் சீனி நைனா
புதுமைக்கவிஞர் பொன்.நாவலன் 
தீப்பொறியாரே மனம் வலிக்கிறது
மறைவை ஏற்க மறுக்கிறது.....!  

மரபுக்காகவே பிறப்பெடுத்து
நற்கவி பல புனைந்தீர்
மரபை மீறும் கவிஞரைச்
சுட்டெரிக்கும் தீப்பொறியே
மரபுக்கவிதை தள்ளாடும் வேளையிலே
மண்ணை மறந்து விண்ணை நோக்கி
நெடும் பயணம் சென்றதேனோ........!

தீப்பொறியாய் சொற்கள் வெடித்தாளும்
யாருக்கும் தீங்கிழைக்கா
பிள்ளை மனம் உனக்கு
மணிக்கவிஞர் படைதனை நாட்டில்
திரட்டிவிட்டாய் உன் பணிதனைத்
தொடர்வதற்கு அடித்தளம் அமைத்தீர்
நிறைவான உந்தன் பணிக்கு
வணங்கி நிற்போம்...........!

கோம்பா ஆறு கவிதை
உன் முகவரி கூறும்
உந்தன் நெரிதனை உலகம் ஏற்கும்
கவிதனில் மூழ்கிட அறிஞரும்
உன் வழியில் விரும்பிச் செல்வார் 
கவிதையில் வாழ்வினைச் சொல்வதில்
வல்லோன் நீயன்றோ.........!

உன்னால் கவியுலகம் இங்கே
தலை நிமிர்ந்து நின்றது
கவிதைப்பயிர் வேரூன்றியது
மறைவால் உன் சிம்மாசனம்
வெற்றிடமாய்த் தெரிகிறது
வெறுமையைப் போக்கிட
இனி யார் வருவார்............!

வேற்றுலகம் சென்றாலும்
மரபு செழித்தோங்க வழிசொல் கவிஞரே
உங்கள் ஆத்மா சாந்தி பெறட்டும்
என்றும் எங்கள் மனம் கவர்ந்த கவி நீயன்றோ............!  


                              

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...