முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிதை: மேற்கு சூரியன் முத்தமிடுவான்


 

கவிதை:             மேற்கு சூரியன் முத்தமிடுவான்       17.1.2015                                                        வே.ம.அருச்சுணன் - மலேசியா 

 

சிறப்புக்குரிய உலகத்தமிழர்

வெட்கம்,மானம்,ரோசம் மிகுந்தவர்கள்

நிகரில்லா வாழ்வுக்கு

அன்னியோனியமானவர்கள்........!

 

ஆனால்......! ஆனால்......!

மலேசியத் தமிழர்கள்

புதிரானவர்கள் புரியாதவர்கள்

எவரைப்பற்றியும் கவலைப்படாத நாரதர்கள்..........!

 

சஞ்சிக்கூலிகளின் வரலாற்றை

காற்றில் பறக்கவிடுபவர்கள்

பெற்ற தாயை நடுவீதியிலே நிற்கவைத்துக்

கரகாட்டம் போடும் தற்குறிகள்

மொழி மறந்து இனம் துறந்து

சொந்த பணத்தில் சூனியம் வைத்து

கொக்கரிக்கும் கழுத்திழந்த சேவல்கள்

சுயநலப்பேர்வழிகள்.........!

 

யார் எப்படி போனால் என்ன

தான்மட்டும் வாழ வேண்டும்

சாதிச் சுனாமியில் சிக்குண்டு

உருகுழைந்து மட்டிகள்

சொல் புத்தியோ,சுய புத்தியோ

பகுத்தறிவிழக்கும் பிண்டங்கள்

வேடம் தரிக்கும் குள்ள நரிகள் பல்லினமும்

எள்ளி நகையாடச் செய்யும் கெடுமதியினர்............!

 

வள்ளுவனை முற்றாய் மறந்தவர்கள்

வாழ்வைச் சூதாட்டமாக்கியவர்கள் பல்லாண்டு

நல்லொளி காணா உணர்வு மங்கியவர்கள்...........!

 

செந்தமிழைக் கற்க கையேந்தும்

இவனா தமிழன் வெட்கக்கேடு

இவன் திருந்த இரண்டாயிரமாண்டுகளாகும்..........!

 

இனவுணர்வை அழிக்கும் அரசியல்

கோணங்கிகள் ஒழிந்தால் மட்டுமே இங்கே

தமிழன் நிலைப்பான் இன்றேல்

மேற்கு சூரியன் முத்தமிடுவான்............!

                                          முற்றியது           

                  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...