முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

‘வந்தாய், வென்றாய், சென்றாய் செழுமைமிகு செர்டாங் முத்தே’




                       வந்தாய், வென்றாய், சென்றாய்    
            செழுமைமிகு செர்டாங் முத்தே                   
                    

                          வே.ம.அருச்சுணன் 

வந்தாய், வென்றாய், சென்றாய்
நீ எடுத்த அவதாரமா?
உழைப்பு....உழைப்பு.....
உழைப்பவனே உயர்ந்தவன்
உலகுக்கு நீ உதாரணம்
எல்.முத்து நீ நல்முத்து.........!

உயிரும் உடலும்
இரத்த வியர்வையில்
தொண்டனுக்கும் நேரமுண்டு
உண்ண, உறங்க, உல்லாசம்
நேரமுண்டு, காலமுண்டு உனக்கோ
உறங்கத்திலும் வேலையுண்டு
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு
என்னே உன் நியதி......!

பொன்னை விரும்பும் பூமியிலே
தன்னை விரும்பும் மனிதனுண்டு
உன்னை விரும்பும் பிறவியுண்டு
மனிதம் விரும்பும் புத்தன் நீ
நல்லோர் சபைதனிலே
வல்லோர் பட்டியலில் முதல்வன் நீ
வாழ்வை வசப்படுத்தியக் கலைஞன்
மாசற்ற குடும்பத்தலைவன்.........!

வாழ்வில்
கட்டிடக் கலைஞனாய்ப்
பரிணாமத்தைக் கொண்டவனே
பிரமிப்பை ஏற்படுத்தியவன்
இலக்கியம் படைப்பிலும்
திகைப்பை ஏற்படுத்தினாய்
அவை என்றும் நிலைக்கும்
மலேசிய இலக்கியமாய்
தேமதுரத் தமிழோசையாய்
உலகமெல்லாம் எதிரொலிக்கும்
இரட்டைக் கோபுரமாய்
நிலைபெற்று வாழ்வாய்........!

உயர்விலும்
ஒருவரையும் மறந்ததில்லை
உறவுகளைத் தகர்த்ததில்லை
தரம் கெட்டோரை அண்டியதில்லை
நன்மக்களைப் பெற்றாய்
குறையில்லா வாழ்வு தந்தாய்
மாடிவீட்டில் வாழ்ந்தாலும்
மமதையில்லா மனிதர் நீ......!

கோவில் என்றாலும்
கல்விக்கூடம் என்றாலும்
உன் பங்கு ஓங்கி நிற்கும்
நாடியவர் உள்ளம் மகிழ்ச்சியில்
எந்நாளும் துள்ளும்........!

மலேசிய எழுத்தாளர்கள்
அவர்களின் எழுத்துகளை
உரமிட்டு வளர்த்தாய்
உனது மீளா உறக்கம் 
உள்ளத்தை நறுக்கும்
எல். முத்தே; எங்களின் சொத்தே
இறவாப் புகழ் பெற்றவனே
உன் ஆத்மா சாந்தி பெறட்டும்.......!

                                              முற்றும்




                 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...