முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மிட்லண்ட்ஸ் தோட்ட எழுத்தாளர் டாக்டர் இராமசாமி மலையப்பன்


மிட்லண்ட்ஸ் தோட்ட எழுத்தாளர்
டாக்டர் இராமசாமி மலையப்பன்
வே.ம.அருச்சுணன் –மலேசியா


                                                 நியூ காசல் பல்கலைக்கழகத்தில்
எழுத்தாளர் மலையப்பன் இராமசாமி டாக்டர் பட்டம் பெற்றார் 

கிள்ளான், மிட்லண்ட்ஸ் தோட்டம் 70 ஆம் ஆண்டுகளில் பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது. எழுத்துலகில் இன்றும் உலவிக்கொண்டிருக்கும்   எழுத்தாளர்களில்  வே.ம.அருச்சுணன், மூ.சீரியநாதன்,  கவிஞர் க.பத்மநாபன், கவிஞர் கருமுத்து.சொக்கநாதன்,ஆகியோரைக் குறிப்பிடலாம்.எடுத்த எடுப்பிலேயே தமிழ்மலர் நாளிதழிலில் யார் குற்றம் எனும் தலைப்பில் தொடர்கதை எழுதி தோட்ட எழுத்தாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியவர் திரு.ம.இராமசாமி. பின்னர் அவர் பல சிறுகதைகளை உள்ளூர் நாளிதழ்களில் எழுதினார். “உனக்கு சாவு வாராதோ”, வாய்மை, பாத்தியா என் மகனே, யாருக்கு யார் சுமை, மனம் படும் பாடு, இதய தாபம், சிரிக்கும் உள்ளங்கள், தப்புத்தாளங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
நாடக நடிகராகவும்,நாடகங்களை எழுதியும் இயக்கியும் பல நாடகங்களை தமிழர் திருநாள் மேடைகளில் அரங்கேற்றியவர்.மலேசியத் தமிழர் கலைமன்றத்தின் அமரர் உயர்திரு ஆழி அருள்தாசன் அவர்கள் எழுதி இயக்கிய முல்லைத்தேர்,கடாரம் போன்ற நாடங்களில் இவர் சிறப்பாக நடித்ததுடன் தமிழகத்தில் அரங்கேறிய கடாரம்.




                      எழுத்தாளரைப் பாராட்டிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்


                                    
                                         
       
        கடாரம் நடகத்தில் நடித்த எழுத்தாளரைப்பாராட்டும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்



நாடகத்திலும் தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தி நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் பாராட்டினைப் பெற்றவர். எம்.ஜி.ஆர் அவர்களும் இவரது நடிப்புத் திறனைப் பாராட்டியுள்ளார். கவிஞர் கண்ணதாசனின் எழுதிய பாடல்களை மேடைகளில் பாடி பாராட்டுகளைப் பெற்றவர்.
                                   
 கவிஞர் கண்ணதாசன் அவர்களுடன் எழுத்தாளர்


மிட்லண்ட்ஸ் தோட்ட சௌந்திரராஜன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட இவர், சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பாகப்பாடிப் பல  பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். மலேசிய வானொலியிலும் பாடல்களைப் பாடி பரிசுகளைப் பெற்றுள்ளார்.
மேடையில் பாடும் எழுத்தாளர் ம.இராமசாமி

போட் கிள்ளானில் இயங்கிய கொண்டிருந்த தென்றல் இசைக்குழுவில் இணைந்து சுயமாகப் பாடல்களைப் புனைந்து இசையமைத்து பல மேடைகளில் பாடி மக்களைப் பரவசப்படுத்தியுள்ளார். பக்திப்பாடல்களின் தொகுப்பாகப் பல கேசட்டுகளை வெளியிட்டுள்ளார். இவற்றுள் கோடியூர் ஐயினார் கேசட் இவரது திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.    

மிட்லண்ட்ஸ் விளையாட்டு மன்றத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். காற்பந்து  விளையாட்டில், இவ்வட்டாரத்தில் பலம்பொருந்திய குழுவாக பல ஆண்டுகள் வெற்றிநடை போட வைத்தவர்.



பிரதமர் துன் அப்துல் இராசாக் அவர்கள் விருது வழங்குகிறார் 
       
செம்பிறைச் சங்கத்தில் உயர் அதிகாரியாக எழுத்தாளர் ம.இராமசாமி ஆவார். கிள்ளான் செம்பிறைச் சங்கத்தின் தமிழ்ப்பிரிவுத்தலைவராகப் பொறுப்பேற்று பல தொண்டூழியப்பணிகளில் தம்மைமுழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். 



இவரது நீண்ட நாள் சேவையைப் பாராட்டி முன்னாள் பிரதமர் துன் அப்துல் இராக் அவர்கள் இவருக்குச் சிறந்த சேவைக்கான உயரிய விருதை வழங்கி சிறப்பித்தார்.

                                            
                                                    

                     
                                அன்புத்துணைவியார் திருமதி பார்வதியுடன் எழுத்தாளர்


திருமதி பார்வதி அவர்களை வாழ்க்கைத்துணைவியாக கரம் பற்றிய இவருக்கு சண்முகப்பிரியன் மற்றும் சந்திரப்பிரியா என இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.அப்பாவைப் போல் இவர்களும் நன்கு பாடும் திறன் பெற்றவர்கள். இவரது தம்பி கணேசன் மலையப்பன் அவர்களும் பக்திப்பாடல்களைப்  பாடுவதில் சிறந்து விளங்குவதுடன் மிருதங்கம், தபேலா போன்ற இசைக்கருவிகளை இவரது பிள்ளைகள்களும் இயக்கும் திறனையும் பெற்றவர்களாவர்.

                அலுவலக அதிகாரிகளுடன் எழுத்தாளர் விமானத்திலிருந்து கையசைக்கிறார்

இரவாங் பட்டணத்தில், அமைந்துள்ள பெரொடுவா மலேசிய கார் உற்பத்தி நிறுவனத்தில் மேலாளராகப் பல ஆண்டுகள் பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பின் தனது பணி சார்ந்த துறையில் மேற்கல்வியைத்  தொடர்ந்தார். ஐந்தாண்டுகள் கடுமையாக உழைத்ததன் பயனாக டாக்டர் பட்டம் பெற்றார். ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஒன்றை அமைத்து பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகப் பணிபுரிந்தவர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று அவர் சேவையை வழங்கி வந்தார்.
மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் 16.5.1999 ஆம் நாள் தோற்றுவிக்கப்பட்டது. அன்று முதல் சங்கத்தின் ஆலோகர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற எழுத்தாளர் ம.இராமசாமி அவர்கள் சங்க வளர்ச்சிக்குப் பெரும் சேவையை வழங்கியுள்ளார். சிலாங்கூர் மாநிலத்தில், பள்ளி மண்டபத்துடன் பல்வேறு வசதிகளுடன் நவீனமானக் கட்டிடத்தைக்   கொண்ட பள்ளியாகத் தற்போது மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி விளங்கி வருகிறது. மேலும், இப்பள்ளி மாணவர்களுக்களின் நலன் கருதி, மாணவர்கள் பள்ளியில் தங்கி பயிலும் வகையில் விடுதி ஒன்றையும் கட்டி முடிக்கும் தருவாயில் இருக்கிறது.

கட்டுரையாளர் வே.ம.அருச்சுணன் அவர்களுடன் எழுத்தாளர் ம.இராமசாமி

1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ் மலர் பல்லாண்டுகள் சிறப்புடன் வெளிவந்து கொண்டிருந்த சமயத்தில் 1971 ஆம் ஆண்டில் எழுத்தாளர் ம. இராமசாமி அவர்கள் யார் குற்றம் என்ற தலைப்பில்  ஐந்து வாரங்கள் குறுநாவல் ஒன்றை எழுதி வாசகரிடையே  புகழ் பெற்றார்.48 ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழ் மலர் புதுப் பொலிவுடன் வெளிவருவது மகிழ்ச்சியே.அன்றும் இன்றும் இந்நாளிதழ் வாசகர்களிடையே பெரும்செல்வாக்கை பெற்றிருப்பது மகிழ்ச்சியே.
பல தொடர்களை எழுத வேண்டும் என்ற அவரின் பேரவா நிறைவெய்தாத நிலையில், சிறிதுகாலம் நோய்வாய்ப் பட்டபின்  கடந்த,  4.6.2018 ஆம் நாள் காலமானார் என்ற செய்தி தமிழ் மலர் வாசகர்களை அதர்ச்சிக்குள்ளாகியதுடன், மிட்லண்ட்ஸ் தோட்டத்தின் மண்ணின் மைந்தர்களுக்கு ஓர் இலக்கியவாதியையும், பண்பட்டக் கலைஞரையும் இழந்து பெரும் துயரில் மூழ்கினர்.
இவர், தமிழ் மலர் ஞாயிறு இதழில்  22.11.1970 முதல் தொடராக எழுதிய, யார் குற்றம் என்ற நாவலும், சிறுகதைகளும் விரைவில் நூலாக்கும் முயற்சியில் அவரின் அன்புப்புதல்வர் சண்முகப்பிரியன் முனைப்பு காட்டுவது, எழுத்தாளர் ம.இராமசாமி அவர்களின் படைப்புகளைத்  தமிழ் மலர் வாசகர்கள் மீண்டும் வாசித்து மகிழும் தருணத்தை எண்ணி மகிழலாம்.

                                                   முற்றியது




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...