முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

   “உனக்கு என்ன ஆயிடுச்சு”                    வே..ம.அருச்சுணன்                                      
      ஏதோ செய்யக் கூடாதத் தவற்றைச் செய்து விட்டவன் போல் குமார் தலை குனிந்து கொண்டான்! குற்றவாளிக் கூண்டில் நிற்கும்  குற்றவாளியைப் போல் அவன் முதலாளி கேட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் கூறாமல் மௌனசாமியாகிப் போகிறான்!
       பிஎம் ஆர் தேர்வில்  சிறப்பாகத் தேர்வு பெறாமல் போகவே,  இனியும் படிக்க வைப்பதில் யாதொரு பலனும் விளைந்துவிடப் போவதில்லை என்று முடிவு எடுத்துவிட்டதால்,  குமாரின்  அப்பா பால்ய நண்பன் கோமகனிடம் தன் மகன் குமாரை அவனது வாழ்வில் எப்படியாவது கரை சேர்த்துவிடும்படி கூறி  முழுமையாக அவரிடம் ஒப்படைத்துவிட்டார்!
        பதினாறு வயதில் தன் கார் பட்டறைக்கு வந்த குமாரை பத்து வேலையாட்களுடன் பதினோராவது வேலையாளாக வேலையில் சேர்த்துக்
கொண்டார். வேண்டிய பையன் யென்றும் பாராமல் தொழில் கற்றுக்கொடுப்பதில்
முதலாளி கண்டிப்புடன்  நடந்து கொண்டார். குமாரும் சொல்லிக்கொடுத்த வேலைகளைக் குறுகிய நாளிலேயே முறையாகக் கற்றுத் தேர்ந்தான்! குமாரின் திறனைக்கண்டு முதலாளிக்கும் அவனை மிகவும் பிடித்து விட்டது!
         சிரமம் யென்று கருதும் வேலைகளைக் கூட அவன் மிக இலாவகமாக விரைந்து செய்து முடிக்கும் திறனைக் கண்டு முதலாளி வியந்து போனார்! குமாரைத் தனிப்பட்டவகையில்  கவனித்துக் கொள்கிறார்! எனினும் அவனது தனிப்பட்ட விவகாரத்தில்அவர் என்றும் தலையிடுவதில்லை! குமாரும் தன்னைப் பெரிதும் நம்பியுள்ள முதலாளியின் மனம் கோனாமல் நடந்து கொள்வான்!
         காலை எட்டு மணிக்கெல்லாம்  ‘மக்கள் சக்தி’ கார் பட்டறைத் திறந்திட வேண்டும்.பணி மணிக்கு வந்துவிட்ட வேலையாட்கள் தத்தம் பணிகளைச் செய்வதற்காகச் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்குகின்றனர்.     
           வேலையாட்கள் வருவதற்கு முன்பாகவே பட்டறைக்கு வந்துவிட்ட
முதலாளி,ஒரு வினாடியைக் கூட யாருக்கும் தாரை வார்க்க விரும்பாது          
தன் அலுவலக அறையில் ஏதோ வேலையில் மும்முரமாகி இருந்த வேளையில்                                                                    
கடந்த ஒரு வாரமாக வேலைக்கு வராமல்அத்திப் பூத்தது போல் அன்று வேலைக்கு வந்திருக்கும் குமாரிடம் தீவிரமாக விசாரணையைத் நடத்திக்கொண்டிருந்தார்.
 முதலாளி முன் குமார் ஏதும் பேச முடியாதவனாக வாயடைத்து நிற்கிறான்.
       “குமார்….. கேட்கிறேன்ல…..பதில் சொல்லுப்பா…. நீ நல்லாதானே வேலை செஞ்சிக்கிட்டு ஒழுங்கா இருந்த? தீடீர்னு உனக்கு என்ன ஆயிடுச்சு?”                  பொறுமை இழந்தவராகச் சற்று கோபமாகவே கேட்கிறார்!
         இவனது நண்பர்கள் சிலர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் குமாரையும் காவல் நிலையத்தில்
ஒருவார காலமாகத் தடுத்து வைத்ததால் வேலக்கு வரமுடியாதக் காரணத்தை
ஓரளவுக்கு அவர்அறிந்து வைத்திருந்தாலும் உண்மையைக் குமார் வாயாலேயே வர வேண்டும் என்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தார்.
          முதலாளி பலமுறை குமாருக்கு அறிவுரைக் கூறியிருந்தார். “பிழைக்கும் வழியைப்பாருப்பா, கூடாத நண்பர்களின் சகவாசம் கூடாது!” வேண்டியப் பையன் என்பதால் கொஞ்சம் அழுத்தமாகவே கூறியிருந்தார்!  அவர் கூறியிருந்ததற்குப் புறம்பாகத் தான் நடந்து கொண்டதால் முதலாளி கோபமாக உள்ளார் என்பதை உணர்ந்து கொண்டவன் மௌனத்தை ஆயுதமாகப் அவன் சற்றேப் பயன்
படுத்தினாலும் இனியும் அவ்வாறு பதில் கூறாமல் இருக்க முடியாது எனும் நிலை உருவாகிவிட்டதால் முழுமையாக நடந்தவற்றைக் கூறிவிடுகிறான்!
          முழுமையாக விசியங்களைக் கேட்டறிந்த பின்னர், நல்ல பையன்,தெரியாமல் முதல் முறையாகத் தவறு செய்துவிட்டான். அப்படியொரு தவறு மீண்டும் நடக்காது  என்ற அவனிடம் உறுதி மொழியை வாங்கிக் கொண்ட பிறகு முழுமனதுடன் மன்னித்து அவனை வேலையில் சேர்த்துக் கொள்கிறார்.
            தன் மீது முதலாளி வைத்திருந்த நம்பிக்கையை எண்ணிப் பார்க்கிறான்.அவனுக்குப் பெரும் மலைப்பாகப் போய்விடுகிறது! தவற்றை உணர்ந்த அவன், தனக்குச் சம்பளம் கொடுக்கும் முதலாளியின் மனம் இனியும் கோணும்படி  நடந்து கொள்ளக்கூடாது என்று தீர்க்கமான ஒரு முடிவுக்கு
வந்துவிட்டான்! நண்பர்களின் சகவாசத்தை அவன் முற்றாக ஒதுக்கிவிட
உறுதி பூண்டான்! மறுநாள்,வழக்கத்திற்கு முன்னதாகவே பட்டறைக்கு வந்து விட்ட குமார் தன் வேலைகள் மட்டுமின்றி, சகத்தொழிலாளர்களின் வேலைகளையும் சேர்த்து செய்து கொண்டிருந்தான்!
                ஒருவாரகாலச் சிறைவாசம் அவன் மனநிலையை வெகுவாக மாற்றியிருந்தது! ஞானோதயம் பெற்றவன் போல் அவனது நடவடிக்கைகள் அமைந்திருந்தன!
                 பட்டறைக்கு வந்திருந்த முதலாளி, நேரத்திலேயே வந்திருந்த குமாரைக் கண்டு மகிழ்ச்சியுறுகிறார். வழிதவறிப்போனவன் மீண்டும் நல்வழிக்குத் திரும்பியது அவருக்கு மன ஆறுதலைத் தரவேச்செய்தது.நல்ல வேலையாள் மீண்டும் தனக்குக் கிடைத்து விட்டத்திருப்தி ஒருபுறமிருந்தாலும், உலகத்தை      இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளாத வெகுலித்தனம் அவனது வாழ்வை அழித்து விடுவதுமட்டுமின்றி அவன் மீது வைத்துள்ள குடும்பத்தின் ஒட்டுமொத்த      நம்பிக்கையையும் நிர்மூலமாகிப்போவதை  அவர் சிறிதும் விரும்பவில்லை.         சூழ்நிலைக் கைதியாகிப் போனவனைக் காப்பாற்றிக் கைத்தூக்கிவிடுவது தனது கடமையாக எண்ணினார்!
                பழுதாகிப் போயிருந்த காரின் இயந்திரத்தினைக் கழற்றிக் கொண்டிருந்தான் குமார். உதவியாளர் ஒருவன் அவனுக்கு உதவிக் கொண்டிருந்தான். பழுதடைந்திருந்த அந்தக் காரை உரிமையாளரிடம்
சொன்னபடி மறுநாளே சேர்த்துவிட வேண்டும். நீண்ட நாட்களாகத் தனது வாகனத்தை இங்குதான் பழுதுபார்த்துக் கொண்டிருக்கும் கண்ணியமான வாடிக்கையாளர்.அதுவும் குமார்தான் அந்த வாடிக்கையாளரின் வாகனத்தைப்     பழுதுபார்ப்பது வழக்கமாகும்!
                  குமார்  இல்லாததால்குறித்த நேரத்தில் காரைப் பழுது பார்க்க இயலாமல் தத்தளித்துக் கொண்டிருந்த முதலாளிக்குச் சரியான நேரத்தில் அவனே அங்கு வந்து செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதைக் கண்டு மிகுந்த  மனமகிழ்ச்சியடைந்தார்! குமாரின் அருகில் வந்த முதலாளி,   “குமார்……! என் மானத்தைக் காப்பாற்றிட்டப்பா……..! மிக்க நன்றி குமார்…….!”  என்று கூறி  தன் இரு கரத்தையும்  கூப்பி அவனுக்கு நன்றி கூறினார்.
                   தனக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கும்  முதலாளி தன்னைக் கைக்கூப்பி வணங்கியதைக் கண்டு அவன் ஒரு கணம் துடிதுடித்துப் போய் விட்டான் !  “முதலாளி……….! நீங்க என்ன காரியம் செஞ்சிட்டிங்க…? நான் உங்ககிட்ட வேலைச் செய்யிற ஒரு சாதாரண வேலையாள்! எனக்குப் போயி நீங்க
கைக்கூப்பி நன்றி சொல்றதா……! “ படபடத்துப் போகிறான்.
                    உடல் ஆடிக்கொண்டிருந்த  குமாரின் தோளைத் தட்டிக் கொடுத்து,
 “அப்படி யொன்றும் நான் பெரிய மனிதன் இல்ல குமார்……நானும் உன்னைப் போல ஒரு சாதாரண மனிதன்தான்! நான் சொல்லும் வரை நீ காத்திராமல் சூழ்நிலையை உணர்ந்து சுயமாகச்  செயல் பட்ட உன் கடமை உணர்வைக் கண்டு நான் அதிக மகிழ்ச்சியடைகிறேன் ” குமாரின் இரு கரங்களையும் பிடித்துக் குலுக்கி
விட்டு  அவனது சட்டைப் பைக்குள் ஐம்பது ரிங்கிட் புது நோட்டு ஒன்றைக் கண்ணிமைக்கும் நேரத்தில் சொருகிவிட்டு விருட்டென்று அங்கிருந்து புறப்பட்டுச்
செல்கிறார்!
                 முதலாளி போவதையே அதர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான்
குமார் ! திக்பிரமைப் பிடித்துக் கொண்டவன் போல் சில நிமிடங்கள் ஆடாமல்       அசையாமல் சிலையாக  நின்றுக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த உதவியாளர் அவன் உடலைத் தட்டி உசிப்பியப் பின்னரே சுய
 உணர்வடைந்தான்!  
                    தன்நிலையடைந்த அவன், மனிதநேயம் மிக்க ஒரு நல்ல மனிதரின்
மனவருத்தத்தைச் சம்பாதித்துக் கொண்டது எத்தகையத் தவறு என்பதை உணர்ந்து
கொண்டபோது அவனையும் அறியாமல் கண்கள் பனித்தன! நல்லவன் என்று பெயரெடுக்கப் பல காலமாகிறது; கெட்டப் பெயர் தன்னை மறக்கும் அந்த
வினாடியே வந்து சேர்ந்துவிடுகிறதே! வழிந்தோடியக் கண்ணீரைத்  துடைத்துக் கொள்கிறான்! அன்புடன் முதலாளி வழங்கிய ஐம்பது ரிங்கிட்  நோட்டை தன்
சட்டைப் பையிலிருந்து எடுத்து கண்களில் ஒத்திக் கொண்டு மீண்டும் அதனைப் பத்திரமாகச் சட்டைப்பைக்குள் வைத்துக் கொள்கிறான்!
                  என்ன நினைத்துக் கொண்டானோ, தனக்குத் தானே தலையை ஆட்டிக் கொள்கிறான்! நீண்ட பெருமூச்சு ஒன்றை உதிர்த்தபடிப் பாதியிலேயே விட்டிருந்த             தன் வேலையை மீண்டும் செய்யத் தொடங்கினான்! நாளையே உரிமையாளரிடம் வாகனத்தைக் கொடுக்க வேண்டுமல்லவா…..! அவனுள் குடிகொண்டிருந்த  பொறுப்புணர்ச்சி,செயல் வடிவம் காணும் வகையில் உதவியாளரின் உதவியுடன்
வேண்டியப் பழுதுகளை  மளமளவெனச் செய்யத் தொடங்குகிறான்! அன்று மாலையே கார் செப்பணிடும் வேலை முடித்தாக வேண்டுமே!மதிய உணவையும் உண்ன மறந்த நிலையில் வேலையில் மும்முறம் காட்டியதைக் கண்ட        முதலாளியே உணவை வாங்கிக் கொடுத்தார்.மாலை நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லா வேலைகளும் முடிந்துவிட காரை ஸ்டாட் செய்த போது
குமார் நினைத்தபடியே காரின் இயந்திரம் சீராக இயங்கியது! அப்போது காரின்
உரிமையாளரும் அங்கு வந்துவிடவே எல்லாருடைய முகங்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கின!
                    குறித்த நேரத்தில் காரைப் பழுதுபார்த்துக் கொடுத்ததால் ஒத்துக் கொண்ட தொகைக்கும் மேலாக ஒரு கணிசமானத் தொகையை முதலாளியிடம்
கொடுத்துவிட்டுச் செல்கிறார்!
                    கார் பட்டறையின் வளாகத்தை விட்டுச் சென்று மறையும் வரையில்
குமார் அந்தக் காரைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்!
                     மாலை மணி ஐந்தை நெருங்கிய வேளை பட்டறையில் பணிபுரியும்
வேலையாட்கள் தத்தம் வேலைகளை முடித்துக் கொண்டு இல்லம் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர்! குமார் மட்டும் எஞ்சிய வேலைகளை முடிக்கும்
 மும்முரத்தில் இருந்தான்! எல்லா பணியாளர்களும் போய்விட்டனர்.
                     அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தவர், குமார் வேலை செய்துக்
கொண்டிருந்த இடத்திற்கு வருகிறார். துணுக்குற்ற குமார் முதலாளியை வணங்கி
நிற்கிறான்.வந்த முதலாளி குமாரை தன் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்கிறார்!
                  “ குமார்……நான் சொல்லப் போவதைக் கவனமுடன் கேளப்பா…..!”
என்று முதலாளி கூறியபோது குமார் குழம்பிப் போகிறான்.முதலாளி என்ன கூறப்
போகிறாரோ என்ற ஆவலில் அவரின் முகத்தை உற்று நோக்குகிறான்!
                   முதலாளி மிகவும் நிதானமாக,குமார்……நாளை முதல் இந்த கார் பட்டறையை நடத்த உன்னை நியமிக்கிறேன்,அதோடு மட்டுமல்லாது வரும்
வருமானத்தில் கணிசமான விழுக்காடு வருமானத்தை உனக்குத் தரப்போகிறேன், ”
அலுவலகச் சாவியைக் குமாரின் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்படுகிறார் நாளைத் திறப்பு விழாக் காண விருக்கும் புதிய பட்டறையை
நோக்கி!   கப்பல் போல் காட்சியளித்துக் கொண்டிருக்கும் தன் புது இரகக் காரில் பறந்து செல்லும் முதலாளியின் செய்கையைக் கண்டு குமார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான்!
                                      முற்றியது
 நயனம் ,மலேசிய மாத இதழ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாமன் மச்சான் விளையாட்டு

            மாமன் மச்சான் விளையாட்டு                                       வே.ம.அருச்சுணன்  மாமன் மச்சான் விளையாட்டை மிகவும் பக்குவமாகப் பன்னிரண்டு முறை விளையாடியது போதாதென்று விளையாட்டுக்காட்ட பதின்மூன்றாவது முறையும் படையுடன் புறப்பட்டுவிட்டார் இதோ ‘ சிவாஜி போஸ் ’    இளிச்சவாயன் தமிழந்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் பெரிய மச்சான்.....! தமிழனைக் குழியில் தள்ள பெரிய மாமன் சென்ற வழியே உத்தமம் என்றே முடிவு செய்துவிட்டார் குருந்தாடி சூப்பர் மச்சான் வாய்ப்பந்தலில் சுருண்டு விழுவான் நாளுபேரை மட்டும் வசமாய் வளைத்துப் போட்டால் நாளுங் கெட்டத் வீரத்தமிழன் வெற்றிவேல் , வீரவேல் என்றே கொடிபிடித்து நிற்பான் இன்னும் அரை நூற்றாண்டுக்குச் சொகுசாய்த் தமிழன் முதுகில்   பவனிவரலாம் அல்லவா ? தேர்தல் கொள்ளையுரையைப் பவிசுடன் அறிவிக்கிறார் ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...

பணமூட்டை புகை மூட்டமானது

கவிதை:             பணமூட்டை புகை மூட்டமானது                                  வே.ம.அருச்சுணன் – மலேசியா   சோற்றில் மண்ணைப் போடுதல் தர்மமாகுமா ? காற்றில் விசத்தைக் கலத்தல் நீதியாகுமா ? தூய்மைக்காற்றை மாசுபடுத்தல் நல்லதாகுமா ? மக்கள் தினம் அவதிபடுதல் மனிதநேயமா ? நோய்கள் தாக்க வழிசெய்தல் இதயம் தாங்குமா ?   உலகெங்கும் உன் சொத்து மதிப்பே பல கோடி நாளெல்லாம் அதன் பேச்சு நிம்மதியோ ஓடிப்போச்சு!   ஏழை சிறுகுப்பை எரித்தல் பெரும் குற்றம் நொடியில் நீதிதேவன் வாசலில் நிற்பான் கனமுள்ளவன் காட்டை எரிப்பான் காப்பதற்கும் அரசும் துணைநிற்கும் தீ அணைப்பதற்கும் வானில் பணமழை பெய்யும் நீதிகேட்டால் முக்கியப் புள்ளிகளாம் மௌனமே பதிலாகும் என்றும் ஏழையின் குரல் அம்பலத்துக்கு வராது!   மக்கள்  அரசு நீதி காக்கும் பேதமின்றி கண்ணீர் துடைக்கும் ...