முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புது கவிதை :நமது செங்கோல்



நமது செங்கோல்......!
இனறைய நாட்டு நடப்புகள்
மனதை வாட்டுகின்றன........!
மூவினமே நாட்டை ஆள்வதாய்
பூரித்திருந்தோம்..........!
ஆனால்....ஏமாளியானோம்.........! 

வல்லான் வகுத்ததே
வழி என்றாகிப் போனதே........!
எத்தனை ஏற்றத்தாழ்வுகள்.....?
நாட்டு நடப்பதை பார்த்தீரோ........?

மலாய் இனம் ஆட்சியிலே
சீனர் இனம் மாளிகையிலே
தமிழர்களோ.....தமிழர்களோ......
கையேந்தும் நிலையிலே………!

ஐம்பதாம் ஆண்டுகளில்
அரசு பணியில்
நிறைவாய் வாழ்ந்தோம்………!
கறுப்புத்தினத்திற்குப் பின்னர்
கருவிலே அழிக்கப்பட்டோம்.......!

கல்வியில் புறம் தள்ளப்பட்டோம்
கரை சேர முடியாதக் கப்பலாய்
நடுக்கடலில்
சுனாமியால் சுழற்றப்பட்டோம்.......!

நாட்டு விசுவாசிக்களாய்
முந்திச் சென்றோம்
ஆளம் கட்சிக்கு தோள் கொடுத்தோம்.......!
55 ஆண்டுகள்
அவர்கள் காட்டில் பொன்
நம் வாழ்வில் மண்.......!

நாம்,
சிந்திய வியர்வை,
வீணாகிப் போனதே....!

எட்டிய தூரம்
நல்ல தலைவன்  தெரியவில்லை......!
தம்மைக் கைத்தூக்கிவிடும்
மண்டேலா இன்னும் இங்கே பிறக்கவில்லை......!


கல்வி,
ஒற்றுமை,
உழைப்பு,
நேர்மை,
சுயமரியாதை,
இனமானம்,
இதுவே
நம்மை  வாழவைக்கும் செங்கோல்......!





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...