முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயிரைக் குடிக்கும் போலிகள்

:        உயிரைக் குடிக்கும் போலிகள்      
                 வே.ம.அருச்சுணன் 

மக்களின் தோழன் காவல்துறை
நேர்த்தியாய் இருந்தது
தொல்லையென்றால்
ஓடோடி வந்து பணி செய்த காலம்
மலையேறிய விட்டதோ
அச்சநிலையில் இன்று மக்கள்
வாழ்கின்றனர்...........!

போலிஸ்சாரா? போலி சாரா?
மக்கள் தோழனா,மக்களின் எதிரியா?
காவல்துறை முகங்களில் இறுக்கம்
மக்களின் மனங்களில் நடுக்கம்..........!

2000 தொடங்கி இன்றுவரை
தடுப்புக்காவலில் 219 மரணங்கள்
பதினொரு நாளில்
நமது ரத்தத்தின்
மூன்று மரண ஓலங்கள்
மக்கள் தினம் செத்துப் பிழைக்கும்
துயரங்கள் தொடர்கதையோ..........?

வேலியே பயிரை மேய்வதேன்?
கள்ளத்தோணியில் இங்கு
வந்தாருக்கும் இல்லை கொடுமைகள்
நமக்கு மட்டும் வரிந்து கட்டி அநீதியேன்.........?

வேண்டாம் அநீதிகள்
சட்டம் எல்லாருக்கும் சமம்
சதிகள் அழியட்டும்
நீதி நிலைபெறட்டும்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்
வாழ்வில் வசந்தம் மலரட்டும்..............!

இளையோர்
பண்பாய் வளரட்டும்
தலைவர்கள் முன்மாதிரியாகட்டும்
உலகெங்கும்
நாட்டுப்புகழ் ஓங்கட்டும்
ஒளிமயமான வாழ்வு அமையட்டும்
ஓரினமாய்
நமது மக்கள் வாழ்வதற்கு
பெருந்தலைவர்கள் மனத்தில்  
இசைவாய் செயல்கள் அமையட்டும்......!

குத்திவிட்டு
வேடிக்கை பார்க்கும்
கொடிய குணங்களை
வேரோடு அறுத்திடுக
நாட்டு அமைதிக்கு அநீதி செய்யும்
தலைவர்களை
நாட்டு நலம் கருதி
தடுப்புக்காவலில் வைத்திடுவோம்......! 

சிறையில் சிதைந்து போன
நம்செல்வங்களின் அனுபவங்கள்
ஆணவத் தலைவர்கள்
தவறாமல் அனுபவிக்கட்டும்...........!




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...