முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் இந்த தலையெழுத்து

:            ஏன் இந்த தலையெழுத்து           
                           வே.ம.அருச்சுணன் 
ஆதியிலே
இருநூறு ஆண்டுகளின் வீதியிலே
இந்நாடு வெறும் காடுகளாக இருக்கையிலே
வெள்ளையர்களின் கொடுங்கோல் ஆட்சியிலே
மலைநாடாக இருந்த வேளையிலே
வயிற்றுப்பசிக்காக வந்த ஏழைகளிலே
ஆண் என்றும் பெண் என்றும் நிற்கையிலே
பாகுபாடு ஏதும் காட்டாத வகையிலே
வேலை வாங்கினான் அடிமை நிலையிலே
கொசுக்கடிக்கும் விஷப்பாம்புக் கடிக்கையிலே
உயிரிழந்தோர் எண்ணிக்கைக் கூடுகையிலே
விலங்குக்கு இரையான கணக்குக் கண்பிதுங்கயிலே……..!

நல்லுணவின்றி பல்வேறு நோய் கண்டார்
அநியாய சாவுகளை மலையாய்க் கொண்டார்
நாதியற்ற அநாதிகளாய் புதையுண்டார்
நாட்டே முதன்மை என்றார்
உயர்வுக்கு ஏணியாய் நின்றார்.........!

நிலத்தில் ஓடியது வியர்வை ஆறு நன்று
நொய்யத்தில் வடிந்தது பால் அன்று
இந்தியரின் குருதி என்றால் பிழையன்று
நாட்டின் வளம் உயர்ந்ததன்று............!

காட்டையழித்துச் சாலை அமைத்தான்
கருஞ்சாலைகளால் இனத்தைக்காட்டினான்
குன்றின்மீது மின்சாரக் கம்பம் நாட்டினான்
வாழ்வில் மட்டும் மடுவில் நின்றான்
குடிநீர் குளம்கட்ட உயிரைப் பணயம் வைத்தான்
தன்குடியுர மட்டும் கடுகளவும் எண்ண மறந்தான்
மரமாய் வாழ்ந்ததாலே மானமும் இழந்துவிட்டான்...........!

நாட்டுத் தலைவர்களின் உள்நோக்குப் பார்வையில்
வீழ்த்தப்பட்டே நிர்கதியாய் துவண்டு நிற்கையிலே
தொலைநோக்கில்லா நம் மண்டைகளின் வீராப்பிலே
சொந்த இனத்தையே அடித்து உலையில் போடுகையிலே
நம்பிய மக்கள் நடுவீதியிலே யாசகம் செய்கையிலே
துரோகிகளை வீழ்த்திடவே தருணம் நெருங்கையிலே
கிழடுகளின் அட்டகாசம் அழித்திட அறவழியிலே
இளைய சிங்கங்கள் தெளிவுடன் நிற்கையிலே
தமிழன்  தன்மானமாய் வாழ்கையிலே
வாழ்வதற்குத் தீர்க்கமான வழியினிலே
ஒன்றாய் எழுவீர் இளஞ்சிங்கங்களே........!

ஆதியில் பாடுபட்ட தமிழன் அல்லலில்
உழைக்க மறுத்த இனம்
சோம்பி வாழ்ந்த மனம்
மகிழ்ச்சியின்  சொர்கவாசலில்
நம்மைக் கண்டு ஏளனம் எகத்தாளம்
இறக்கை கட்டிப்பறக்கிறது
அநீதிக்கு அரை நூற்றாண்டு
குடைபிடித்து நின்றது போதும்
இருளில் மொட்டை போட்டு
இளிச்சவாயர்களின் வரிசையில்
கொடிமரமாய் நின்றது போதும்
இனியாகிலும் நாட்டுக்குரியவனாய்
மிடுக்குடன் வாழ்ந்திட இன்றே
இளையோர் தன்னினம் எழுச்சி கொண்டு
துணிந்து எழுந்திடு உன் கடன் செய்திடுக
தலையெழுத்தை மாற்றிடுக........!
                               
                                முடிவு


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...