முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெஞ்சுப் பொறுக்குவதில்லையே...

:      நெஞ்சுப் பொறுக்குதில்லையே                        
               வே.ம.அருச்சுணன்

இம்மண்ணில் பிறந்த
டெங்கில், பெர்மாதா குடியிருப்போர்
நூறு நாட்களாய் வீதியிலே
பணக்காரர் வீட்டு நாய்கள்
குளிர்சாதன அறையிலே.....!

நாட்டை வளமாக்கி
உருகுழைந்து  அப்பாவிகள் உறங்க
நிதம் தவிப்பது தலைவர்களுக்கு
கண்ணாமூச்சா?

எங்கோ பிறந்தவர்கள்
புத்திரா ஜெயா சொர்கபூமியில் உல்லாசம்
சகுனியின் வஞ்சனையால்
விரட்டப்பட்டோர் நடுவீதியில்
கண்காணாத நாட்டில்
குளிருக்குக் கம்பளி  
சொந்த நாட்டில் மக்கள் கொசுக்கடியில்...!
ஏனோ, தமிழனின் கதறுல்கள்
யாருக்கும் கேட்பதில்லை
மற்றவருக்கு வெண்ணெய்
நமக்குச்  சுண்ணாம்பு...!

மனித நேயத்தை மறந்தான்
இறைவனும் பெர்மாத்தா மக்களை மறந்தான்
மனிதன் வஞ்சித்தது போதென்று
துன்பங்களை மறந்து கண்ணயரும்
நடு இரவு என்றும் பாராமல்
இடியாய்,மின்னலாய்,புயலாய்,மழையாய்
அல்லாட வைத்து விட்டாயே?
 மனிதனால் பட்டது போதாதென்று
இறைவா நீயுமா எங்களைச் சோதிப்பது?
எங்கே போவோம்
இது நாங்கள் பிறந்த பூமி....!

நம்பிக்கையில் 
உயிரைப்  பிடித்துக் கொண்டு
தீபத்திருநாளை இல்லத்தில்
கொண்டா வேண்டுகிறோம்
மனம் குளிரும் செய்தி
விரைவில் வந்திட ஏங்குகிறோம்
நடுவீதியில் நிர்கதியில்
உன்பார்வை எங்கள் மீது
வரைந்து விழுவட்டும்
பிள்ளைக் குட்டிகளின் கண்ணீர்
நொடியில் மறையட்டும்
கணக்கின்றி நாட்டைச் சுற்றிவரும்
தெய்வங்கங்களே உன் பத்தர்கள்
நெடிய நலம் பெற
ஆசி வழங்கிட வந்திடுவீர்.....!
 
              முற்றும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...