முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கல்விப் பெருந்திட்டம் 2013- 2025

கல்விப் பெருந்திட்டம் 2013 -2025   


மலேசியா கடந்த 56 ஆண்டுகளாக  எந்தவொரு அரசியல் மாற்றமும் இல்லாமல் இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் மாறும் போது கல்விக் கொள்கையில்  பல அதிரடி மாற்றங்களைக்  கொண்டுவந்து மக்களைத் திக்கு முக்காடச் செய்வதில் பரவசம் அடைவதைப் பெரும் சாதனையாகக் கருதுகின்றனர்.குறிப்பாக இந்தியர்களும் சீனர்களும் கொண்டு வருப்படும் இத்திட்டங்களால் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவது தவிர்க்கப்படாமல் போகின்றது.
பல இனங்களைக் கொண்டுள்ள இந்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு முன்னுரிமைக் கொடுக்காமல்,அரசியல் பலம் கொண்ட குறிப்பிட்ட ஒரு கட்சியின் விருப்பத்திற்கேற்ப,  அந்த இனத்தின் உயர்வுகளுக்கும் வளர்ச்சிக்கும் மட்டுமே  முன்னுரிமை வழங்கும் நிலையில் அரசாங்கம் மக்களின் மனங்களில் தேவையில்லாதக் குழப்பங்களையும் பீதிகளையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒவ்வொரு முறையும் மில்லியன் கணக்கில் பணம் செலவிடப்பட்டு கல்வி அமைச்சால் அமுல்படுத்தப்பட்ட பலதிட்டங்கள் அதன் இலக்கை முழுமையாக அடையாமல் தோல்வி அடைந்து வருவது கண்கூடு.        
நாட்டின் அடுத்த பிரதமராகும் தகுதியைக் கண்டிருக்கும்,துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ மொகைதின் யாசின் அவர்களால்  கடந்த 6.9.2013 ஆம் நாள் அறிமுகம்  செய்யப்பட்டதுதான் கல்விப் பெருந்திட்டம் 2013 – 2025 ஆகும்.தேசிய ஒருமைப்பாடு முக்கிய ஒரு நோக்கமாக வலியுறுத்தும் இப்புதிய கல்வித் திட்டம் அடுத்து வரும் 12 ஆண்டுகளுக்கு நாட்டின் தலையெழுத்தை மாற்றுமா? அல்லது இதுநாள் வரையில் கடந்து சென்ற பல திட்டங்கள் போல் இதுவும்  தோல்வியில் முடிந்து விடுமா? என்று சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது!
-               இத்திட்டம் மலாய்,ஆங்கில மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-   56% தமிழ்ப்பள்ளியிலும்,96% சீனப்பள்ளியிலும் தத்தம் தாய்மொழிகளைப்பயிலும்    மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது.
-  தமிழ்,சீன பள்ளிகளில் மலாய் மொழிக்கான நேரம் 180 நிமிடத்திலிருந்து 240                                           நிமிடத்திற்குக்கூட்டப்பட்டுள்ளது. மலாய் ஆசிரியர்களின் எண்ணிக்கைக் கூடும்.
-        ஆங்கில மொழிக்கான நேரம் 90 நிமிடங்களிலிருந்து 210 நிமிடங்கள் கூடுகிறது.
-      இசை,தேகப்பயிற்சி போன்ற பாடங்களின்நேரம் குறைக்கப்படுகிறது. அந்த         நேரங்களில்            மலாய்,ஆங்கிலம் போதிக்கப்படவிருக்கிறது.
-               நன்னெறிக் கல்வியின் பண்புக் கூறுகள் மாற்றப் பட்டு இஸ்லாமியக் கூறுகள் புகுத்தப் படவிருக்கிறது.தற்போது இடைநிலைப்பள்ளிகளில் வரலாற்றுப்பாடத்தில் 40 விழுக்காடு  வரை இஸ்லாமிய வரலாறு சேர்க்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டால் நன்னெறிப்பாடமும் அந்த நிலையை அடையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுகிறது.
-               முஸ்லிம் அல்லாதருக்கான நன்னெறிப் பாடத்திட்டம் தயாரிப்பு முதல் கற்பித்தல்,தேர்வுத்தாள் தயாரித்தல்,மாணவர் விடைகளைத் திருத்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் முஸ்லிம்களே செய்து வருகின்றனர் என்பதைக் கருத்தில் கொண்டால் நன்னெறிப் பாடம் அதன் அடையாளத்தை இழக்கும் நிலை மிக அருகில் இருப்பதை அறிய முடிகிறது.
-               200 தமிழ்ப்பள்ளிகளில் காணப்படும் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அரசாங்கம் அப்பள்ளிகளை மூடும் அபாயம் உள்ளது.
-               அதனை ஈடுகட்டும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் தேவைப்படும் புதிய தமிழ்ப்பள்ளிகளைக் கட்டும் அரசாங்கத்தின் திட்டங்கள் தெளிவுபடுத்தபப்டவில்லை.
-               10,000 வேலையாட்கள்( penolong pentadbir) இத்திட்டத்திற்காக உருவாக்கவிருக்கும்திட்டத்தில்தமிழ்ப்பள்ளிகளில்மலாய்க்காரர்களின்ஆதிக்கம்
-               ஏற்பட்டு,தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம் மாறும் நிலை உருவாகலாம்.  

சமூகம் மிகுந்த அக்கறையுடனும் ஒற்றுமையுடனும் தமிழ்ப்பள்ளிக்குத் தம் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்.மாணவர்களின் எண்ணிக்கைக் கூடுவதற்கு உதவிக்கரம் நீட்டவேண்டும்,
தமிழ்ப்பள்ளிகள் இப்போது இருக்கும் தோற்றம் மாறாமல் இருக்க அரசாங்கம் இந்தியர்களுக்கு  உதவ வேண்டும்.
இந்தியத் தலைவர்களும், தமிழ்மொழி தொடர்ந்து செழிப்புடன் வாழ்வதற்கும்,கலை கலாசாரம் நீடித்திருப்பதற்கும் முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும்.
மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதை மறக்கக்கூடாது.ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
                    
                             உயரட்டும் தமிழ்மொழி; வாழட்டும் தமிழ் இனம்!


                                                           முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வே.ம.அருச்சுணனின் வாழ்கை பாதையிலே

 எழுத்தாளர் உடன் சை.பீர்.முகமது மற்றும் டத்தோ எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் மற்றும் வழக்கறிஞர் பசுவதி , பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்                        2013 இல் மாநில முதலமைச்சர் ( மந்திரி பெசார்) உடன்...

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும் .....

கல்விப் பெருந்திட்டமும் தாய்மொழிகளின் அழிவும்                         வே.ம.அருச்சுணன்  சிறந்த கல்வியை வழங்கும் நாடு அறிவார்ந்த மக்களைக் கொண்டிருக்கும்.மக்களின் அறிவு மூலதனத்தைக் கொண்டு அந்நாடு துரித வளர்ச்சி அடைவதுடன் வளர்ச்சி பெற்ற நாடுகளுடன் போட்டியிடும் ஆற்றலையும் அது பெறும்.துரித வளர்ச்சியை நோக்கி  வெற்றி நடைபயிலும் , பல்லினம் கொண்ட மலேசியா  அதன் கல்விக் கொள்கை மிகத்தெளிவாகவும் , வெளிப்படையானதாகவும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் தொலை நோக்கைக்   கொண்டிருக்க வேண்டும். அரசியல் வாதிகளின் மேதாவித்தனத்தைக் காட்டும் களமாகக் கல்விக்கொள்கை மாறிவிடக்கூடாது. நீண்ட நெடிய பயணத்தைக் கொண்டுள்ள கல்விக் கொள்கையில் தேவையற்ற அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகள் அரங்கேற்றம் காணக்கூடாது. குறுகிய வட்டத்திற்குள் தீவிரம் காட்டும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் மீது மக்கள் கவனம் செலுத்துவதோடு , நாட்டின் சொத்தாகக் கருதப்படும் எதிர்காலச் சந்ததியினரின் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாகச்  செயல்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. வழங்கப்படும் கல்வி இனங்களிடை