முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எழுச்சி கொள்வோம்

                  எழுச்சி கொள்வோம்     
                                  வே.ம.அருச்சுணன் 

இனிய உள்ளங்களே
இறை நம்பிக்கை மிக்கோரே
கண்களைத் திறந்து பாருங்கள்
கனவுகளை நீட்டிக்கவே வாருங்கள்...!

56 ஆண்டு
நாம் கண்ட கனவு பலித்ததா
சுதந்தரக் காற்றைச் சுவாசிக்கிறோமா...?
சஞ்சிக்கூலிகளாக வந்த நாம்
கெஞ்சாமல் வாழ்கிறோமா...?
சொல் மனமே சொல்?
மனம் திறந்து சொல்...?

ஆதியில் வந்து காட்டை அழித்து
நாட்டை உருவாக்கிய
தமிழ் இனமே....  வாழ்வின்
சுகத்தை அனுபவிக்கிறோமா...?
இன்னுயிரை நாட்டுக்காத்
தாரளமாகத் தாரை வார்த்தோமே
பலன் கண்டோமா...?
கோட்டை விட்டோமா...?
சிந்திக்கும் வேளை வந்திவிட்டது
சிதறாமல்,பதறாமல்
செயல் படும்  நேரம் நெருங்கிவிட்டது

குனிந்தது  போதும்
குட்டு வாங்கியதும் போதும்
தமிழினமே
ஒன்று படுவோம் ஏற்றமுடன்
மானம்,மரியாதையோடு வாழவே
எழிச்சி கொள்வோம்
விரைவில் மீள்ச்சி கொள்வோம்
தடம் தப்பாமல் விரைவாய்
வாருங்கள் தமிழினமே.....!


                                    முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...