முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பன்முகப் படைப்பாளர் அதிகைமணி


                              பன்முகப் படைப்பாளர் அதிகைமணி        26.4.2020
                                                வே.ம.அருச்சுணன்

கவிதையுலகில் தன்னிரில்லா கவிதைகளால் தனி முத்திரைப் பதித்து பன்முகப் படைப்பாளர் வெ.ஆறுமுகம் எனும் இயற்பெயர் கொண்ட அதிகைமணி அவர்கள் 17.4.2019 ஆம் நாள் மறைந்து ஓராண்டு நிறையொட்டி,அவரை நினைவும் வகையில் பல அரிய தகவல்களோடு  ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் குணசீலன் சுப்பிரமணியம் அவர்கள் விரிவான கட்டுரை எழுதிய அன்னாருக்குப் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிள்ளான் வாசியான அவரை நான் பல வேளைகளில் சந்திப்பது வழக்கம்.தமிழ் மொழிச்சம்பத்தமான எனது சந்தேகங்களுக்குத் அவர் விளக்கம் தரும் பேராசானாகத் திகழ்ந்தவர்.எதையும் மிகத்தெளிவாகக் கூறுவார்.அவரின் எழுத்துக்கள் அனைத்தையும் விரும்பி வாசிப்பேன்.பணி ஓவ்வுக்குப் பின் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.எனினும் நண்பர் ஒருவரின் மூலம்2013 ஆம் ஆண்டு அவரை மீண்டும் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன் எனினும் அவர் மிகவும் அமைதியுடன் காணப்பட்டார்.அவரது மறைவு மலேசிய  இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு  என்பதை இங்குப் பதிவு செய்கிறேன்.              
                                          -------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜ...