முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இல்லார் நல்லார்


கவிதை:              இல்லார் நல்லார்               3.3.2020
                                    வே.ம.அருச்சுணன் 

மக்களை அவமதிக்கும் அரசியலால்
       மாண்புகள் காத்திடவே இயலாதாம்
வக்கில்லா வாழ்வே  நிலையானால்
        வாழ்விலே திண்ணமாய் அழிவாராம்
நக்கலில் வலம்வரும் அற்பர்களால்
        நம்பியோர்  வாழ்வும் நாசமாகும்
மக்களிதை உணர்ந்தால்  மட்டுமே
      மானமுடன் வாழ்வது  உறுதியாகும்...!

குள்ளநரிக் கூட்டமாகக் கூடிவந்தே
       கூடிபேசிக் குடியைக் கெடுத்திடுமே
தள்ளாத  வயதென்றும் எண்ணாதே
       தாழ்மையுடன் பேசுதலும் மறைத்திடுமே
துள்ளாது மனங்களும் துடித்திடுதே
        தூயமனமும் தேய்ந்தே போயிடுமே
வள்ளலாய்க் களவுமனம் கொள்ளுமே
        மடுவளவும்  வஞ்சகம் மறவாதே...!



எல்லாரும் நலம்காண எண்ணுவோம்
        ஏக்கங்கள் மறைந்திட வேண்டுவோம்
மல்லுக்கு  நிற்போரை விலக்கிடுவோம்
         மனதாரப்  பிறநலம்  காத்தே
சொல்லுக்கு  உயர்வினைத் தந்தாலே
        சோர்விலா வாழ்வும் வந்திடுமே
இல்லாரை நேசித்தலே வாழ்வென்றே
        ஈன்றவர் மகிழவே வாழ்த்திடுவோம்...! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...