முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மலேசியாவில் ‘மௌனம்’ சிற்றிதழ்

கட்டுரை:       மலேசியாவில் மௌனம் சிற்றிதழ்         28.5.2013
                 வே.ம.அருச்சுணன் – மலேசியா
மலேசியாவில் 2009 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை வெளிவரும் தற்காலக் கவிதை சிற்றிதழாகும்.மலேசிய நாட்டின் முன்னணிக் கவிஞர் ஜாசின் ஏ.தேவராசன் அவர்கள் பொறுப்பில் இந்த இதழ் வெளிவருகிறது.
      நினைத்த நேரம் வெளிவரும் இதழ் என்று குறிப்புடன் இலவசமாக வெளியிடப்படும் இவ்விதழில் மலேசிய நவீன கவிதை முன்னணி எழுத்தாளர்கள் பலர் எழுதுவது வழக்கமாகும்.
  மா.சண்முகசிவா,சீ.முத்துசாமி,கோ.புண்ணியவான்,சை.பீர்முகமது,பா.அ.சிவம்,கே.பாலமுருகன்,ந.பச்சைபாலன்,சீ.அருண்,மஹாத்மன் போன்றோரின் எழுத்துகள்  இதழினை வளம் சேர்க்கும் பட்டியலில் முதன்மையானவர்கள்.
       நல்ல பல கவிதைகள் இவ்விதழில் இடம் பெறச்செய்யும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.சிறந்த கவிஞர்களின் வட்டத்தை இந்த இதழ் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.
       புதுக்கவிதைகள் மட்டுமின்றி கருத்துப் பரிமாற்றக் கட்டுரைகள்,விமர்சனம் பலவும் இந்த இதழில் அவ்வப்போது இடம் பெறும்.மலேசிய நவீன படைப்பிலக்கியத்திற்கு இந்த இதழின் பங்களிப்பு வரவேற்கத்தக்கதாகும்.
      தரமான படைப்புகள் மூலம் மலேசிய எழுத்தாளர்களின் திறனை இந்நூல் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யும் பணியை மிகச் சிறப்பாகச் செய்துவரும் இச்சிற்றிலக்கிய இதழ் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன்.

      மின் அஞ்சல் வழி நவீனப் படைப்புகளை அனுப்பலாம்.

      ovilak@yahoo.com.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...