முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏமாளிகளா....கோமாளிகள....


கவிதை:          ஏமாளிகளா...கோமாளிகளா....?        
                                  வே.ம.அருச்சுணன் 

மொத்தமாய்
ஐந்து ஆண்டுகள்                     
முடிந்துவிட்ட நிலையில்
5.5.2013 இல்
மக்களின் மனங்களைச்
செவ்வனே சுத்திகரிக்க
மீண்டுமொருமுறை
நல்லாட்சிக்கு வரவுகூற
ஜனநாயக தீபமேற்ற
நடந்தது பதின்மூன்றாவது பொதுத்தேர்தல்.....!

தேர்தலுக்கு முன்னும் பின்னும்
வேட்பாளர்கள்,கட்சித்தொண்டர்கள்
வானவில்லையும் மிஞ்சும் மனிதர்கள்
விஸ்வரூமுடன் அரங்கேற்றிய
அடாவடிகள்
ஜீரணிக்கவும் முடியவில்லை
தடுக்கவும் வழியில்லை
தப்பாட்டம் வென்றது.......!

தேர்தலுக்கு மட்டுமே
முகம் காட்டும் நிபுணர்கள்
காட்டிய வித்தையில்
அதிசயங்கள் பல்கிப் போயின
அடுத்த தேர்தல் மட்டும் அவை
மனத்திரையில் ஓங்கி நிற்கும்
இரட்டைக் கோபுரங்கள்.....!

புதிய வார்ப்புகளாய்
வரலாறு காணா குளறுபடிகள்
மனங்கள் ஏற்க மறுக்கும் நடமுறைகள்
வெளிநாட்டார்
கண்டு களிப்புற்ற காட்சிகள்.....!

ஆள்வோர் வகுத்த வழி
கபட நாடகங்கள்
தலைப்பாகை கட்டிக் கொண்டன
தர்மம் குப்புறக்கவிழ்ந்து கொள்கிறது
கைகளைப் பிசைந்த நின்ற
மக்களின் முகங்களில்
கருமேகக்கூட்டங்கள்......!

ஆற்றிலொரு சேற்றிலொரு கால்கள்
இரண்டும் கெட்ட நிலை
தமிழர் வாழ்வு 
சோதனையின் உச்சமா?
வெற்றியன்னை முத்தமிட அச்சமா?
இனங்களின் துச்சமா?
நமக்கு வாழ்வே எச்சமா?

கையேந்தும்
நிலையில் வாழ்வதாலே
பகடக்காயாக மாற்றப்பட்டோம்  
மற்ற குடியினருக்கும்
நிகராக வைப்பதற்கு
ஆளும் வர்கத்தினருக்கு
குணமும் இல்லை வாழ்விக்க
மனமும் இல்லை.....!

வெற்றி முழக்கம்
தூக்கலாய்க்  ரீங்காரமிடுகிறது
அதிகார அதிர்வேட்டுகளும்
மூலைமுடுக்குகளில் ஓங்காரமிடுகிறது
வழக்கம் போல் தர்பார்........!  

வாக்கு மட்டும்
வக்கணையாய்ப் பெற்று
நடுவீதியிலே விட்டகதை
இன்னுமொரு
ஐம்பத்தாறு ஆண்டுகளுக்குத்
தொடர வேண்டுமா....?


                                     முடிவு 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...