முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!

                இறை கவிஞர் சீனி நைனா மறைந்தாரே!         7.8.2014                    
                          வே.ம.அருச்சுணன்  - மலேசியா

இனிய பேச்சும்
நுண்ணிய கருத்தும்
தொலை நோக்குப் பார்வையும்
வலுவான கருத்தாலும்
பிறவிக் கவிஞராய் மனித மனங்களில்
தடம் பதித்த மாமணியே
திடுமென இறைவனடி சேர்ந்ததேனோ?

கவியுலகின் கலங்கரை விளக்கே
கவியால் வான்புகழ் பெற்றவரே
உனது பிரிவால் கவியுலகம்
கலையிழந்து போனதே
கானக் குயில் குரல் இழந்தே
வாடுதல்  பொறுக்கலையே
கைபிடித்த வளர்ந்த குழந்தை
திசை இழந்து துடிக்குதே
கவிமழை பொழிந்த வானம்
காரிருளில் பொசுங்குதே.........!

உன்
தொல்காப்பிய உரைக்கு
மனம் குளிந்த மனங்கள்
நாட்டில் பலருண்டு
தேனுண்ட வண்டாய் களிப்புற்ற
உள்ளங்கள்
தாங்கள் பல்லாண்டு வாழ்ந்திட  
இறைவனிடம் மண்டியிட்டார்
தொல்காப்பிய விருதும் தந்து
உங்கள் மனம் குளிரவைத்தார்.............!

உந்தன்
கவிமுழக்கம் தொடராய்க் கேட்பதற்கு
நாங்கள் தளமிழந்தோம்
சந்தேகம்
கேட்க இனி யாரிடம் செல்வோம்?

கவிக்கோமானே
எங்களை விட்டு வெகு தூரம்
சென்றதன் நீதி என்ன?
மனுநீத் சோழன் நீதி சொல்வாறா?

கவித்தொண்டு
உந்தன் உயிர் தொண்டு
உங்கள் குரல்
தமிழுலகம் தடம் புரளாமல்
செல்லும் வழி சொன்னீர்
நாளெல்லாம்
உனக்குத் தமிழ்ப்பணிதான்
இலக்கணம் போதித்த ஆசான்
தமிழர் மனம் இனிக்க
எறும்பாய் உழைப்பைத் தந்தாய்
தமிழுக்குத் தொண்டு செய்தோன்
இறப்பதில்லை
நிறைவான தொண்டால்
நிலைத்து நிற்பீர்
வாயார வாழ்த்துகிறோம்
உம் மனம் சாந்திக்கு
கண்ணீரில் கவிபாடுகிறோம்.............!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...