முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏங்கும் சுதந்திரம்


கவிதை:     ஏங்கும் சுதந்திரம்     
 வே.ம.அருச்சுணன் – கிள்ளான்

ஐம்பத்தேழு ஆண்டுகள்
மறைந்த மாயம் தெரியவில்லை
மூன்று இனங்களின்
தொலை நோக்கு நிரந்திரமாய்
அன்னியரின் தொல்லைகள் மாய்தன………..!

ஆகஸ்டு 1957 31
கதிரவன் கண் விழிக்க
அரங்கத்தில் மக்கள்
கடலாய்  நிறைந்திருக்க
பெருமிதம் நெஞ்சில் சுமந்திருக்க  
சுதந்திரத்தந்தை துங்கு
மெர்டேக்கா……..மெர்டேக்கா
ஏழுமுறை சீரிய சிங்கமாய்
உணர்ச்சியின் உச்சத்தில்
சங்கநாதமாய் முழங்கிட
மக்கள் இடியாய்த் தொடர்ந்தனர்.......!

அன்றுதான்
மக்கள் முதல் முறையாக
சுதந்திரக்காற்றை ஆழமாய்ச்
சுவாசிக்கத் தொடங்கினர்………!

இனி ஏழேழு தலைமுறையும்
பிழைத்துக் கொள்ளும்
நம்பிக்கை…..நம்பிக்கை
மக்கள் முகங்கள் பூத்த
மலர்களாய் மணம் வீசின
தெருவெல்லாம் வண்ண மயிலாய் நர்த்தனம்…………!

அடிமை வாழ்வு துறந்துவிட்டோம்
மூவினமும் சமநிகராய் உய்வதற்கு
மண்ணின் மைந்தன் பிறப்புரிமை
போதுமென்றே இறுமார்ந்தே
57 ஆண்டுகள்
கண்மூடி ஒட்டளித்தே
மண்டூகமாய் வாழ்ந்துவிட்டோம்……!

2020 நோக்கி
நாடு வெற்றிப் பயணம்
வானலாவிய கட்டிடங்கள்
ஒருசாராரின் வெற்றிச் சின்னங்கள்
துரோக அரசியலின்
எச்சங்கள்…………..!

சிரித்தே கழுத்தறுத்த
மகா திருடர்கள் நீண்டு வாழ்கின்றார்
அரசியல் பிழை செய்தோருக்குக்
அறமே கூற்றாகும் 
வரலாற்றையே கேலி செய்யும்
இட்லர்களின் தண்டோரா வளர்பிறை
வாசம் தாங்க முடியவில்லை…….!

இருண்ட உலகில்
சந்ததிகளின் வாழ்வு
நமக்கு சுதந்திரம் எப்போது?
மொழி,இனம் மறக்கும் நமக்கு
சுதந்திரம் எப்போது?
பிரிந்து வாழும் நம்மினம்
சுதந்திரம் எப்போது?





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...