முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ

கவிதைஆளாய்ச் சென்று ஆவியாய் வந்தீரோ 21.8.14
                வே.ம.அருச்சுணன் - மலேசியா

ஆளாய்ச் சென்று மக்கள்
ஆவியாய் பிறந்த மண்
திரும்புவது என்ன கொடுமை?
உலகில்  
இப்படியும் நடப்பது மனம் ஏற்குமா?

பச்சைப் பாலகன் முதலாய்
இளையோர் முதியோர்  
வாழ்வில் வசந்தம்
இனிய கீதம் இசைக்க
வானில் பயணிக்கும் வேளை
பாவிகளின் அடாவடியால்
நொடியில் தூளாகிப்போனது
இறைவா உன்னதாட்சியில் நீதி
கள்ளத் தோணியில்ஏறிக்கொண்டதே!


இறந்த பின்னும்
பிறந்த மண் தேடியவரும்
எங்கள் அன்புச்செல்வங்களே
நாட்டு மக்கள்
இனம்,மதம்,மொழி
கடந்து வரவேற்க
நீங்கள் சென்ற நுழைவாயில்
ஆராத்துயரடன் அகன்ற விழிகளோடு
மடைதிறந்த வெள்ளம் கண்களில்
கொப்பளிக்க வரவேற்கிறோம்………..!

நீங்கள்
நாட்டின் தேசிய வீரர்கள்
இன்னுயிரைத் தந்து நாட்டுப்புகழை
உயரத்தில் உயர்த்திப் பிடித்தவர்கள்……!

நாடே
உங்களுக்காக ஒரு நிமிடம்
மௌனம் கொள்கிறது
புனிதமான உங்கள் ஆத்மா
சொர்கத்தில் நிச்சயம்………..!

அறியாமல்
தவறுகள் செய்திருந்தால்
பெருமனதுடன் எங்களை மன்னிப்பீர்

நாடு
மீண்டும் அமைதி பெற
மக்கள் பிரிவின்றி வாழ
ஒன்றுமையாய் வணங்குகிறோம்
ஆசிர்வதிப்பாயாக………….!
   

                      ---------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...