முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கோவிட் 19

சமீபத்திய இடுகைகள்

புக்கிட் கூடா கம்பம்

  சிறுகதை:              புக்கிட் கூடா கம்பம்       25.5.2020                                                      வே.ம.அருச்சுணன் , கிள்ளான் சைரன் ஒலிக்கிறது ! ‘ அப்பாடா...! ’ பெருமூச்சு விடுகிறேன்.   இன்று வெள்ளிக்கிழமை. நல்லபடியா வேலை முடிந்ததில் மனதுக்குள் சின்னதாய் ஒரு மகிழ்ச்சி! அடுத்து வரும் இரண்டு நாட்கள் , சனியும் , ஞாயிறும் கம்பனி ஊழியர் அனைவருக்கும்   விடுமுறை.   இரண்டு நாட்கள் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருக்கலாம். பிள்ளைகள் விரும்பும் உணவுகளை ருசியா சமைத்துக் கொடுக்கலாம். வழக்கம் போல இன்று , மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டுமே! “மைமுனா...கமி பாலெக் செக்காராங்” தோழி மைமூனாவுடன் வீட்டுக்குப் புறப்படுகிறேன்.இன்னும் பதினைந்து நிமிடத்தில் நான் வீட்டில் இருப்பேன்! ‘ ஜாலான் பத்து தீகா லாமா ’ பிரதான சாலையில் தோழியுடன் வீட்டை நோக்கி வேகமாய் நடக்கிறேன். ‘ கிள்ளான்- கோலாலம்பூர் கம்பனி பஸ் ’ வெள்ளை சிவப்பு நிறத்தைக் கொண்டது. கிள்ளானிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு எங்களைக் கடந்து செல்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை , காலை முதல் இரவு பதினோரு மணி வரை   அப்

பொங்குகவி நெடுமாறன்

பொங்குகவி நெடுமாறன் ************************************ பாப்பாவின் பாவலராம் பைந்தமிழ்க் காவலராம் தீப்பார்வை பாராத தெள்ளுதமிழ் நாவலராம் ! மூப்பிலும் குழந்தைகள் முன்னேறப் பாடிடுவார்! யாப்பறிந்தே மலையத்தில் பாப்புனையும் முரசவராம் ! பூப்போன்ற உளங்கொண்டார் பொங்குகவி நெடுமாறன் ! காப்பியமாய்க் களஞ்சியத்தை கனிவோடு வழங்கியவர் ! நாப்பொழியும் தமிழெல்லாம் நயம்மிக்கப் பண்ணாகும் ! கோப்பையின் மதுநாணும் கோமகனார் கவிகண்டே ! ******************************** எழுத்தாளர் வே.ம.அருச்சுணன் 14.1.2021. (14.1.2021 "பாப்பாவின் பாவலர் "முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் பிறந்தநாளாகும்.)

தாக்கம்

  கவிதை:                             தாக்கம்                     27.6.2020                                                                              தமிழனுக்கு வெற்றிகனி கிட்ட வில்லை                                                                                                                                                                                                                                  தலைவனுக்கும் இதைப்பற்றி கவலை யில்லை தமிழரும் முயன்றும் எழுந்திட   வில்லை         தாக்கத்தை நெஞ்சிலே வளர்த்திட வில்லை அமிர்தரும் மனங்களும் பிறந்திட வில்லை        ஆண்டவன் அருள்தனை உள்ளம் ஏற்பீர்      இமயம்போல் வெற்றிதனை உறுதி   செய்வீர்           ஈடற்ற அறிவாலே   அகிலம் வெல்வீர்....! முயற்சியுடன் உழைத்தாலே வெற்றி வந்திடும்             மூதேவி உனைவிட்டு தூரம் ஓடும் அயலாரும் நானிடவே உழைப்பைத் தந்திடு         ஆற்றலுடன் அடுத்துவரும் சந்ததி உயர்த்து இயன்றதை முழுமையுடம் செய்க உறுதியில்           இமயம்போல் வெற்றியினை இனம் பெறக    உயர்வினை நோக்கியே   ஊக்கம