முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிந்தனையள்ளும் சிலப்பதிகாரம் இலக்கிய குரிசில் ம.இராமையா

கவிதை:        சிந்தையள்ளும் சிலப்பதிகாரம்     
            இலக்கிய குரிசில் மா.இராமையா
                         
                                     வே.ம.அருச்சுணன்                                       

சங்ககால இலக்கிய
சாரளில்
மனிதன் புத்தனானான்
புடம் போட்ட தங்கமானான் 
கறையின்றி உயர்ந்து நின்றான்.............!

சிலம்புக்கு உயிர் கொடுத்த
இளங்கோ
நீதியைப் புகட்டிச் சென்றார்
மலேசியத் தமிழ் இலக்கியத்தில்
மா.இராமையா
தூணாய் நிலைத்து நின்றார்.......!

எண்பத்தாறிலும்
தடி ஊண்றா இளைஞராய்
இலக்கியம் படைக்கிறார் 
தமிழன்னை மனம் குளிர
நூல்கள் வெளியீடுகள் செய்கின்றார்........!
தொய்வில்லா எழுத்தாலே
தேமதுர தமிழோசை
உலகமெல்லாம் பரப்புகின்றார்.
மலேசியத் தமிழ் இலக்கியம்
உயர்வை உலகத்தார் போற்றுகின்றார்...........!

படைப்புகளை நூலாக்கும்
முயற்சிதனை எழுத்தாளர்
மரபாகக் கொள்ளுதல் வேண்டும்
மணியான கருவூலங்கள்
மண்ணில் தவழ வேண்டும்
மறைந்தாலும் பெயர் சொல்ல
நூல்கள் வேண்டும் வேள்வியை
நயம்படச் செய்தவர்
பெரியவர் மா.இராமையா..........!

இலக்கிய வானில்
சுதந்திரமாய்ச் சிறகடித்துப் பறந்து 
கதைகளையும் காவியங்களையும்
விதைகளாய் இம்மண்ணில் பதியமிட்ட
பாசத்துக் குரிய மா.இராமையா
பாராட்டுக்குரியவர்................!

பல ஆண்டுகள்
நலமுடன் வாழ வேண்டும்
தேன் சிந்தும் படைப்புகள்
தமிழ்த்தாயின் மனம்
பல்லாண்டுகள் குளிர வேண்டும்...............!

வாழ்த்த நமக்கு வயது
போதாது என்றாலும்
பெரிய மனசு இருக்கிறது
அதுவும் கடல் அளவு
மனதார வாழ்த்துகின்றோம்
வாழ்வீர் பல்லாண்டு......!


முற்றும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...