முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணதாசன் பிறந்த நாள் கவிதை : மனிதம் வாழ்விக்க வந்தவனே

கவிதை:                                                     
        மனிதம் வாழ்விக்க வந்தவனே            
                              வே.ம.அருச்சுணன் 

இந்த யுகத்தில்
நீ  வாழ்ந்ததில்
பெருமையும் பேறும் பெற்றது
உலகம்...........!

பிறவிக்கவிஞ்சனே
உன் அருட்கொடையால்
உலகம் வாழ்ந்தது
மனிதம் உச்சத்தில் கோலோச்சி புரிந்தது.........!

உன் அமர காவியங்களால்
தமிழின் பெருமை
விண்ணை முத்தமிட்டது
உன் கவிதை வரிகள்
மனிதனின் வாழ்வை நீட்டியது
கயவனைப் புத்தனாக்கியது.........!

களவையும் கற்று மறந்தவன் நீ
கபோதிகளுக்கு
வலுக்கும் சேற்றில் ஊன்றுகோல்
தந்தவன் நீ
தாயை மறந்தாலும்
உன் தர்மத்தை இகழ்ந்திட
யாரும் முயன்றதில்லை
இறைவன் உன்னில்
உலாவந்ததை மறுப்பாரில்லை........!

உடைந்துபோன மனங்களுக்கு
மருந்தானது உன் பேச்சு
வரியவர் வாழ்வை வசப்பட வைத்தாய்
வாழும் கலைகளை அள்ளித்தந்தாய்
குன்றி வாழ்ந்தோர்
செழித்தே வாழ்ந்தார்..........!

கடவுள் அருளால் வாழ்ந்தோர்
பலரிருக்க உன் சொல்லால்
வாழ்ந்தவர் பலகோடி
இது மிகையில்லை உண்மை
என்றும் மறைவதில்லை.........!

மனிதனாகப் பிறந்து
மக்கள் மனங்களில்
வணங்கும் தெய்வமானாய் அது
கண்ணன் காட்டிய வழி..........!
உலகம் அழியுமட்டும்
தமிழர்களின் மனங்களில் நீ
சிம்மாசனமிட்டே கர்சனை செய்வாய்
மக்கள் நலம்  மீண்டிட
தமிழர் இனம் உயர்தல் வேண்டி நீ
மீண்டும் பிறக்க வேண்டும்
கண்ணதாசனே வாழ்க நீ

பல்லாண்டு..........!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...