முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

MH17 பற்றிய ஆதங்கம்....கவிதையாய்.... வலுவான உறவு வற்றாத கண்ணீர்

கவிதை:    வலுவான உறவு வற்றாத கண்ணீர்    
                   வே.ம.அருச்சுணன் – மலேசியா 

விடியா காலைப் பொழுதில்
இடியாய் வந்தே
இதயத்தைத் துளைத்தே
மக்களைத் துடிக்க வைத்தே
கண்ணீர் கடலில் மிதக்கவைத்தாய்............!

இறைவா இதுவென்ன
அடுக்கான சோதனைகள்?
மாதங்கள் நான்கு நகருவதற்குள்
மற்றுமொரு சோதனையா...............?

வண்ணச்சிறகுகள் பூட்டி சிங்காரமாய்
வானில் கம்பீரமாய்
வலம் வரும் மாஸ்சே நீ
கயவர்களின் சதியால்
தூளாகி மண்ணில் சிதறியக்
காட்சிக் கண்டு மனம்
இனம்,மதம்,மொழி பாராமல்
பதறாத மலேசியர் யாருமுண்டோ...........?
           
உலக மக்கள் பலரை
வாஞ்சையோடு இரண்டு சிறகால்
மலேசிய மண்ணின் மணம்
நுகர்ந்திட ஆவலாய்ப் பறந்து வந்தாய்
வஞ்சகரின் கணைகள்
உன் சிறகொன்றை
நடுவானில் சிதைத்தார் சிற்சில
வினாடிக்குள் 295 ஆத்மாக்கள்
வயல் காட்டில்
அனாதைகளாய்ப் பிணங்களாய்.....!

சுயநலம்
வினாடியில் மனிதம் அஸ்தமனம்
மூன்றாம் போருக்கு ஒத்திகையோ?
இன்னுயிர் போக்கும்
மனிதனின் அடாவடியில்
அமைதி விடைபெற்றது............!

அமைதி தேடி எங்கு சென்றாலும்
கழுகாய்த் தேடும் மனிதனிடம்
உலகம் தப்புமா
மனித உயிர்கள் தப்புமா.............?

பல்லின மக்கள் ஒற்றுமையாய்
வீருகொண்டு நிற்கின்றார்
கொலைக்காரர்களைப் பிடிப்போம்
நீதியை நிலைநாட்டுவோம்
நாம் யார் என்பதை உலகுக்கு
உரக்கமாய்ச் சொல்லிவைப்போம்
வன்முறைக்கு
இறுதிச்சடங்கைச் செய்து வைப்போம்
விழிபிதுங்கச் செய்திடுவோம்
தர்மமே வெல்லும் உலக
நீதியைப் மீண்டும் புகட்டிடுவோம்...........!

மண்ணில் மறைந்தாலும்
உயிரிலும் உணர்விலும்
கலந்துவிட்ட செல்வங்களே
ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகிறோம்
என்றும் உங்கள் நினைவை
சுமந்து நிற்போம்
உலக உயர்வுக்கு
நீங்கல் ஆற்றிய
பணிகளுக்கு வற்றாதக் கண்ணீரை
உதிர்த்து நிற்போம்.............!
  




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...