முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மாலை நேரம்




கவிதை:                       ஒரு மாலை நேரம்               
                                                 வே.ம.அருச்சுணன் 

சம்பளம்  கிடைத்திட்ட  மாலைவேளை
        சாந்திக்காக  நண்பர்கள் கூடுகின்றார்   
தெம்புடனே  கடைதனில்  அமருகின்றார்
         தேனாய்க்  கொஞ்சிடும் பேரழகிகள்
வம்பில்லா  தேன்சுவை பேச்சாலே
          வாஞ்சையுடன்  வருகின்றார்  புட்டியோடு
தம்கட்டியே   குடிக்கின்றார் வயிறுபருத்திட                                        
           தாளங்கள்  தாறுமாறாய்ப்   போடுகின்றார்.....! 
         
பொதுமிடமென் றும்பாராமல்  பேயாட்டம்
        போடுகிறார் இனமானம் விற்கின்றார்
மதுவினால்  தம்முயிருக்கும்  விலைகூறுகிறார்                                              
         மாமனிதரையும்  வம்புக்கே  இழுக்கின்றார்
எதுசொலியும்  அனைவரையும்  அநீதிசெய்கிறார்
         ஏனென்று  கேட்போரை வசைபாடுகிறார்
இதுவெலாம்  போதையில்  செயல்படுத்தும்
          ஈனப்பிறவிகள்  பூமிக்கிழைக்கும்  துரோகமன்றோ.....




குடித்தழியும்  பாவச்செயலை   விட்டொழிக்கும்
          கூடிவாழும்  குடும்பத்தலைவனை வணங்குவோம்
 நெடியவாழ்வில்   கோவில்கலசமாய்  விளங்கிடும்
              நேர்மையுள்ள   மனிதர்களை    வாழ்த்துவோம்
 இடியாய்த்   துன்பங்கள்   சூழ்ந்தாலும்
            ஈடற்றவாழ்வை   குறைவின்றி  நடத்திடுவோர்
 முடிமன்னர்  பேற்றினைப்   பெற்றவரே  
             மூடர்களின்  செயல்தனைத்  வேரறுப்பவரே.....!

நல்லநட்பால்    உயர்ந்தோர்   நிலைக்கின்றார்    
             நாளுமே  குணக்குன்றாய்  வாழ்கின்றார்
பொல்லாதவர்   சகவாசத்தில்  அழிகின்றார்
             போக்கிரிகள்  உறவென்றால்   கெடுகின்றார்  
சொல்வேந்தர்   சொற்கேட்டால்   உயர்கின்றார்  
             சோதனைகள்  கடந்துமே  வெல்கின்றார்
சொல்வாக்கிலார்  ஆராதனையை      வெறுக்கின்றார் 
             சோதனையின்றி  வாழ்கையினை   நகர்த்துகின்றார்.....!   
            



             
              
        
              


                       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...