முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனசெல்லாம் இனிக்குதே



கவிதை:           மனசெல்லாம் இனிக்குதே           
                   வே.ம.அருச்சுணன்                           


பொன்விளையும்   பூமியிலலே   காலூன்ற  வேண்டுமையா
         போகற்று   நிற்கையிலே  யாருவுன்ன   மதிப்பதில்ல
 மணிக்கணக்கில்  பேசிநீயும்  சாதிக்கவே  ஒன்னுமில்ல
          மானத்தோட  வாழவேயோசி   ஒன்றுபடவே வழியிருக்கு
சந்ததி நல்லா    வாழனுமுனா   சாதிகீதி   பேசித்திரியாதே
          சாபத்தால   காணாமலே   போயிடுவே  கவனமாயிரு
உருப்படும்வழி     கண்முன்னே   இருக்குதேநீ   வாழ்றதபாரு......!

அண்ணன்தம்பியா   மனம்திறந்து   அனைவரிடமும்   பழகிப்பாரு
         அப்பவரும்   பாசமும்நேசமும்  அன்பும்பண்பும்  ஒட்டும் உறவும்
ஒன்றுபட்டால்   உண்டுவாழ்வுனு   தோட்டத்துலே  கத்துகிட்டோமே
           ஓட்டலயத்துல  வாழ்ந்தயெல்லாம்  
மறந்தெமொக்கை  ஆயிட்டியா


பழசமறந்தா     மனுசனாவாழ    முடியாதுன்னு   தெரியலையா?
           பாவத்தநீ  இன்னுமா சுமக்கனுமுனு  நினைக்கிறியே
முறையாகுமா?   வாழ்க்கைய  மாற்றிக்காட்டு   சரியாயிடுவே
          மூவினமும்   முன்னாடியே போயிடுவஏன்னா     நீஅறிவாளி....!
சோழமன்னர்    கொடிபறந்த  மண்ணிலேநீயும்     வீரமுடன்வாழனும்
         சோற்றுக்காகக்  கையேந்தும்  அன்னக்காவடி  வேடத்தாலே
மடியும்நாளை   எண்ணாதேநீ  கோபுரகலசமாய்   நிமிர்ந்து நிற்கும்
          மானமிகும்  பொன்னாளைக்  களிப்புடனே    வரவேற்கவே
விவேகமுடன்  கூடிடுவீர் வாழும்வழி   தேடுடிவீர்
          வீரமுரசுடன்   நல்வாழ்த்து  கூறிடுவீர்  அனைவருமிங்கே
மகிழ்வுடனே  வாழ்வுதனை  வாழ்ந்திடும்  நற்காலமும்
          மாண்புடனே  பிறந்ததென்றே  எழிச்சியுடனே  கொட்டுமுரசே.....! 


    
                   

     
                         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...