முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு...


     ஜெயமுடன் வாழ்ந்திடு ஐயாவு                                       
                   வே.ம.அருச்சுணன் 

அகிலமும்  யோசித்தே – நீ
               ஆனந்தம்  அடைந்திடு
மகிவுடனே  வாழலாம்   _ நீ
             மாண்பையும்   பெற்றிடு....!

அன்புடன் பழகியே   _  நீ
                ஆலமரமாய்  நிமிர்ந்திடு
உன்னிடம்  நீதியிருப்பின்  _ நீ                                                     
                 ஊக்கமுடன்  திகழ்ந்திடு....!

எல்லாரும்   நல்லவராய் _ நீ
                ஏற்றாலே  பூரித்திடு
நல்லாரின்  அணைப்பாலே  _நீ
                நாளுமே    சாதித்திடு....!

கெடுவான்  கெடுமதியால் _ நீ
                கேட்டதைக்  கொடுத்திடு
நெடுங்காலம்   கூடிமகிழலாம்  _ நீ
                நேர்மையால் உயர்ந்திடு.....!


விட்டுக்கொடு   பகைமறையும்  _ நீ
            வீம்பைமற  வாழ்வுமலர்ந்திடு
தட்டிக்கொடு  உறவாலே _ நீ
            தாயன்பில்   எழுந்திடு.....! 

கனிவானே   நேசத்தால் _   நீ
            காவல்தெய்  வமாகிவிடு
தனியனாய்   மேம்பட்டு _  நீ
            தாளர்வின்றி   வளர்ந்திடு....!

உறவிலே   விரிசலின்றி _  நீ
            ஊருடனே   சேர்ந்திடு
மறவாதாச்  சொந்தத்தால் _  நீ
            மாமனிதராய்   ஒளிவீசிடு.....!

வெற்றுமனித  னாய்த்திரியாமல் _ நீ
            வேற்றுமை  களைந்திடு
வெற்றியானாய்  நலம்போற்றி  _நீ                   
            வேங்கையாய் முழங்கிடு.....!
     
மெய்யாய்   உழைத்திடு  _   நீ
    மேலோரை  வணங்கிடு
ஜெய்க்கனும்  உறுதியாய் ஐயாவு    _  நீ
    ஜெயமுடன்  வாழ்ந்திடு ஐயாவு....!
  


         
               

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                 
                                                        
 

       

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...