முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்


    உச்சம் முயன்றே ஏற்றம் கொள்வீர்     
            வே.ம.அருச்சுணன்                            
                 
கவலைப்படாதே        சகோதராநீ            மகிழ்வுடன்வாழனும்
      காதுமட்டும்         நாலா பக்கம்          நொடியும்திருப்பனும்
தவத்தின் துணை       பெருவாழ்வில்        புகழால் உயரனும்
      தாய்மைக்கு         வணக்கம்கூறி         உயர்வால் நிமிரனும்!

பொல்லாதவர்          சூழ்திருக்கும்            இவ்வுலகினிலே
      போக்கிரிகள்      கழுகுகளாய்ச்           சுற்றும்நாளிலே
சொல்லாமல்            உமைக்கொல்லும்     துயரங்களிலே
      சோராதிருந்தே   வெல்கபுத்திக்           கூர்மைதனிலே!      
  
நல்லாரிங்கே              அழித்தவரே            சுயநலமிகளே
        நாளும்பெருகி     அமைதியழிக்கும்       வஞ்சகர்களே
கொல்லும் திறன்         கொண்டகொடுங்      கோலர்களே
         கோடிவரினும்     தீயோர்உறவைத்       தள்ளுங்களே!

மிஞ்சும்காலம்              நலம்பயக்கவே          நயந்தேவாழ்வீரே
         மீண்டுமொரு      வாழ்வுமில்லை          எண்ணி உணர்வீரே
நெஞ்சத்தின்               நேர்போக்கிலே          உய்வதை ஏற்பீரே
         வீசும்தென்ற      லாய்வாழ்வை            சுவைத்தே மகிழ்வீரே!

   தெய்வங்களின்             கருணையாலே             ஏழையும் வெல்வார்
         தேசம் காப்போர்     வானுயர்ந்தே               சிறக்கவே எழுவார்
   மெய்யாய் வாழ்              வோரிங்கே                  அகிலமும் கொள்வார்
         மேதினிலென்றும்     உயர்மனத்தார்             ஏற்றிப் போற்றுவார்!   
       
   விண்ணவர்போற்ற         உத்தமர் சொல்லை      அறிவில் ஏற்றே
          வீரம்பொதிந்தே      வாழ்தலை அறவோர்   ஏற்பார் நன்றே
   எண்ணம் பதித்தே         அனைவருமிங்கே          உச்சம் முயன்றே
           ஏற்றமுடனே          பதினாறுசெல்வம்         அடைவாய் நன்றே!  

      
  



               





              



              
       
          

                                                                                    










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...