முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகையாளும் பொங்கலே வாழியவே...!

உலகையாளும் பொங்கலே வாழியவே        
                  வே.ம.அருச்சுணன்

இனிதாய்  வந்திடும் பொங்கலே
      உள்ளங்கள்  மகிழ்ந்திடும்  பொங்கலே    
உலகமே   கொண்டாடும்  பொங்கலே
      உழைப்பை  நினைவூட்டும்  பொங்கலே!

தமிழர்கள்   ஒன்றாகும்    பொங்கலே
    தன்மானம்  வளர்த்திடும்  பொங்கலே
பொங்கும்   தமிழரின்    பொங்கலே
      போற்றும்   ஒற்றுமைப்   பொங்கலே!

மலையகம்  கண்டநற்   பொங்கலே
       மாண்பையும்  உயர்த்திடும்  பொங்கலே
மனமிறங்கி    மகிழ்ந்திடும்   பொங்கலே
       மாசுகொண்ட  சாதியழிக்கும்  பொங்கலே!

சத்தியமாய்   நலம்பயக்கும்   பொங்கலே
       சாதகமாய்  வாழ்த்தவரும்  பொங்கலே
தெம்புடனே  தீமையழி   பொங்கலே
         தமிழரிங்கே  செழிக்கனுமே  பொங்கலே!

பொங்கியெழு  வீரமுடனே  பொங்கலே
     போர்குணம் கொண்டெழு  பொங்கலே
தமிழரினம்  கூடிபொங்கும்  பொங்கலே
      தரமுயரவே  பொங்கிடுவாய்ப்  பொங்கலே!

பல்லினம்  மெச்சிடுமே   பொங்கலே
        பாசத்தினை  வளர்க்கனுமே  பொங்கலே
எந்நாளும்    இணைவோம்   பொங்கலே

         ஏற்றமேயினி  வந்திடுமே பொங்கலே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...