முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிழல் நிஜெமாகட்டும்


                  நிழல் நிஜெமாகட்டும்          
                    வே.ம.அருச்சுணன் 

நிழலில்  வாழ்ந்தது  போதும் – இனி
    நோகாமல்  உண்டாலே பேதம்
விழலுக்கிறைத்த நீரானது  சேதம்- இனி
      வேண்டுமளவு  பாடுவெற்றி  கீதம்...!

மனிதனாய்  நலந்தனை  வேண்டுக –இனி
       முன்னேறும்  தடத்திலே சென்றிடுக
தனியனாய்  முயற்சிகள்  செய்திடுக – இனி
       தானமும்  தர்மமும் தந்திடுக...!

இனமானம் மறவாமல் உழைத்திடு- இனி
       ஈடில்லா வாழ்வுதனை அடைந்திடு
மனமெல்லாம் உயர்தனிலே  செலுத்திடு – இனி
      மானமுள  இன்மென்றே  உரைத்திடு....!

நமைத்தூற்றும் மூடர்களையே  வென்றிடுக –இனி
       நாட்டுடனே  விவேகமுடனே  நேசித்திடுக
இழையோடும் துணிவாலே  நிமிர்ந்திடுக –இனி
      ஈடற்றபுகழும் வாய்த்தேநீ  எழுந்திடு...!

இழிச்சவன்  நீயல்லயென  முழங்கிடுக –இனி
       ஈசனருள் உனக்கென்றே சொல்லிடுக
எழிச்சியொன்றே  நீடித்தவாழ்வே  உணர்ந்திடுக-இனி
       எவர்தடுப்பினும்  வெற்றிவருமே மகிழ்ந்திடுக....!       

       

              

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...