முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செம்மொழியும் சேமமும்



கவிதை:     செம்மொழியும்  சேமமும்               21.1.2020
              வே.ம.அருச்சுணன் 

செம்மொழிப்பாடல்  பாடுவதால்  சேமமாகுமே– இங்கே
       சேதாரமின்றி  வாழ்ந்திடலும்  உண்மையாகுமே...!     
வம்பிலாவாழ்  வுதனையேற்றலில்   உன்னதமாகுமே– இங்கே
        வான்முட்டும்   சீரியவாழ்வும்  நிலையாகுமே....!
தும்பியல்வாழ்    விங்கேநீக்கின்    செழுமையாகுமே- இங்கே
        தூற்றலில்லா   ஒருமைவாழ்வும்  உறுதியாகுமே....!
எம்மொழியாலே    ஒளியேற்றிநல்   வாழ்வும்வந்திடுமே- இங்கே
         ஏளப்பேச்சினைத்   துறப்பின்வாழ்வு   பொன்னாகுமே....!

மொழியாலே   ஒன்றாதல்நற்    பேரென்போமே- இங்கே
         மோதலில்லா வாழ்வேற்று  மகிழ்ச்சி கொள்வோமே....!
வழிபலவுளவே  இனிதேமொழி  நலம்வகுப்போமே-இங்கே
         வாடியபயிருக்குத்  தினமும்நீரூட்டி   வளர்ப்போமே....!
தொழிலுறவாலே  உரிமைவளர்ந்திட  நேசம்விதைப்போமே – இங்கே
         தோழமைக்குத் அன்னைமொழி  எந்நாளும்காப்போமே....!
வழியவரும்தேவி   சிரம்தாழ்த்தி  மகிழ்போமே- இங்கே
         வாழ்விழந்தோர்  செந்தமிழால் சீராவோமே....!

ஒற்றுமொழியாலே   இனயெழிச்சிதனை  ஏற்றுவோமே – இங்கே    
         ஓய்ந்திடாமலே  இனியமொழி  காத்திடுவோமே...!
வெற்றுமொழித்  தினிப்புகளை  மறுப்போமே - இங்கே
         வேற்றுமையில்  ஒற்றுமைகாணத்  துடித்திடுவோமே...!
பற்றுகள்பல  இருப்பினும் தாய்மொழியால் உயர்வோமே - இங்கே
        பாசத்தால் நேசத்தால் உடன்பிறப்புகள் வாழ்விப்போமே....!
முற்பகல் செய்யின் பிற்பகலில் மாற்றமே காணுவோமே- இங்கே
         மூத்தமொழியாலே உலகில்சிறந்தே நிலைப்போமே....!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நேரம்

:            நேரம்                                                      வே.ம.அருச்சுணன்- மலேசியா “ நான் சொல்றதக்        கவனமா கேளு மாறன்” “ ஏதும் முக்கியமான விசியமாண்ணே ?” “ம்......முக்கியமான விசியம்தான் மாறன்” “அப்படின்னா....சொல்ல வந்த விசியத்தை உடனே சொல்லுங்கண்ணே ” “அண்ணன் சொல்றேன்னு..... தப்பா நினைக்காதே மாறன் ” “ அண்ணே......நான் எதையும் தப்பா நினைக்க மாட்டேன். எதுவா இருந்தாலும் நீங்க தைரியமா சொல்லுங்க ” “ அங்கப்பன்....இருக்கான்ல.....” “அவன் என் உயிர் நண்பனாச்சே....அவனுக்கு ஏதும்...... ?” “அவனுக்கு ஏதும் ஒன்னும் ஆயிடல....!உனக்குத்தான் ஏதும் ஆயிடக்கூடாதுன்னு.....சொல்ல வந்தேன்....!” “அண்ணே.....நீங்க என்ன சொல்றீங்க.... ? எதையும் சுற்றி வளைக்காமா சீக...

வே.ம.அருச்சுணனின் வாழ்கைப் பாதையிலே

மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்காண விருது பெறும் எழுத்தாளர் திரு . வே . ம . அருச்சுணன் அவர்களின்                                             வாழ்க்கைக் குறிப்பு         சிலாங்கூர் , பெட்டாலிங் மாவட்டத்திலுள்ள புக்கிட்ஜாலில் தோட்டத்தில் 3.8.1948 ஆம் நாள் பிறந்த திரு . வே . ம . அருச்சுணன் அவர்கள் கிள்ளானில் 1972 முதல் ஆசிரியராகப் பணி ஆற்றி வருகிறார் . கல்வித்துறையில் B.Edu(Hons) பட்டம் பெற்றவர் .         ஷாஆலம் , கிளன்மேரித் தமிழ்ப் பள்ளித்தலைமையாசிரியரான இவர்     2004 ஆம் ஆண்டு பணி ஓய்வுக்குப் பின் ,‘ ஸ்ரீ செம்புர்ணா கல்வி மையம் ’ மற்றும் ‘ ஸ்ரீ செம்புர்ணா பாலர் பள்ளி ’ ஆகியவற்றை நிறுவி அவற்றைச் சிறப்பாக நடத்தி வருகிறார் .       ...

வே.ம.அருச்சுணன் ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.

                                             ம.த.எ.சங்கத்தின் பொன் விழாவில் சிறப்பிக்கப்பெறுகிறார்.                                        சிறந்த கட்டுரைக்கான பரிசை பெறுகிறார்....                                                   தனது முதல் பேரப்பிள்ளை ..........                முனைவர்.முரசுநெடுமாறன் மற்றும் அரு.சு.ஜீவானத்தமுடன்.....                                                                         ...